Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் தோனி : ஆசியக் கோப்பை இந்தியாவின் சாதனைகள்!

சியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணி பல சாதனைகளை புரிந்துள்ளது. அவற்றை பார்ப்போம்...

டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் டக்அவுட் ஆன இரண்டாவது கேப்டன் மொர்டஷா. இதற்கு முன் டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று இறுதிப் போட்டியில்  போர்ட்டர்ஃபீல்ட் இதே போல் டக் அவுட் ஆகியுள்ளார். இருவருமே முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதும் இதில் விஷேசம்.

ஆசியக் கோப்பையை இரு முறை வென்ற 3வது கேப்டன் என்ற பெயரை தோனி பெறுகிறார். இதற்கு முன் முகமது அசாருதீன், மகிலா ஜெயவர்த்ததேன ஆகியோர் இரு முறை டி20 ஆசியக் கோப்பையை இரு முறை வென்ற கேப்டன்கள். 

3 டி 20 போட்டிகளில் கேப்டன் தோனி சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்திருக்கிறார். அதே போல் 9 ஒருநாள் போட்டிகளிலும் அவர் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்து வந்துள்ளார் தோனி.

டி20 போட்டியில் 4 முறை டக்அவுட் ஆன கேப்டன் என்ற மோசமான பெயரை வங்கதேச கேப்டன் மோர்டஷா பெற்றுள்ளார்.

ஆசியக் கோப்பையை அதிகபட்சமாக  இந்திய அணி  6வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி 5 முறை கோப்பையை  வென்றுள்ளது.

ஆசியக் கோப்பையில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது  இரண்டாது முறையாகும்.

டி20 பவர்பிளேயில் ஆஷிஷ் நெக்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தி விடுகிறார். தொடர்ந்து அவர் 8வது முறையாக நேற்றைய ஆட்டத்திலும் பவர்பிளேயில் விக்கெட்டை கைப்பற்றினார். டி20 போட்டியில் இவரது எகனாமி 11.64 ஆகும்.

மிர்பூரில் தொடர்ந்து 8வது முறையாக இந்திய அணி  சேசிங் செய்து  வெற்றி பெற்றுள்ளது. மிர்பூர் மைதானத்தில் இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து தோற்றதே இல்லை.

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி தொடர்ந்து 8வது முறையாக டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் இலங்கை அணியும் 8 முறை வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த  ஆண்டில் மட்டும் இந்திய அணி தொடர்ந்து 10 டி20 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.

டி20 போட்டிகளில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, ஒவ்வொரு அணிக்கும் எதிராக 24.2 ரன்கள் அடித்துள்ளார். டி20 போட்டியில் எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனை இது.

இந்திய அணி 27 முறை கோப்பைகளை வென்றுள்ளது. இந்த பட்டியலில் இலங்கை அணி 30 முறை கோப்பைகளை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 56 முறை கோப்பைகளை வென்று முதலிடத்தில் உள்ளது.

ஷிகர் தவான் நேற்றைய ஆட்டத்தில் 60 ரன்கள் அடித்தார். டி20 போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் ராஞ்சியில் நடந்த ஆட்டத்தில்  இலங்கைக்கு எதிராக 51 ரன்கள் அடித்ததே அவரது அதிகபட்சம்.

டி20 போட்டியில் ரன் சேஸிங் செய்கையில் விராட் கோலியின் சரசாரி 100 ஆகும். இது வேறு எந்த வீரரும் செய்திராத சாதனை ஆகும்.

நேற்றையை ஆட்டத்தில் மக்மத்துல்லாவின் ஸ்ட்ரைக் ரேட் 253.85 ஆகும். வங்க தேச வீரர் ஒருவரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் இது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் தோனிதான். சர்வதேச அளவில் தோனிக்கு 5வது இடம். சர்வதேச கிரிக்கெட்டில் 1,300 பவுண்டரிகளையும் தோனி அடித்துள்ளார்.



 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ