Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மரிய ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் சிக்கினார்!

முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா,  ஊக்க மருந்து தொடர்பான புகாரில் சிக்கியதையடுத்து,  பிரபல நைக் நிறுவனம் அவரை  தங்களது விளம்பர ஒப்பந்தங்களில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் தொடங்கவுள்ள நிலையில், இது போன்ற சர்ச்சையில் சிக்கி உள்ளார். மரிய ஷரபோவா உடல் பரிசோதனையில், அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியிருப்பது தெரிய வந்ததுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் மரிய ஷரபோவா, தனது உடல்நிலைக்காக மெலோடினியம் எடுத்து வந்துள்ளார். இதுதான் தற்போது அவருக்கு வினையாகியுள்ளது.

 இதற்கு தானே பொறுப்பு என  மரிய ஷரபோவா தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், ''எங்களது குடும்ப மருத்துவர் எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு மெல்ட்டிரின் என்ற மருந்தை அளித்தார். ஆனால் அதற்கு மற்றொரு பெயர் மெல்டோனியம் எனத் தெரியாது கடந்த 2006-ம் ஆண்டு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் அதனால் உருவான உடல் நலக் குறைபாடுகளுக்காக, மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொண்ட மருந்தில் இருந்த சில உட்பொருட்கள், சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தடை செய்யப்பட்டதை  அறிந்திருக்கவில்லை '' என்றார்.
 

கடந்த 11 வருடங்களாக டென்னிஸ் உலகில் கலக்கி வந்த ரஷ்யாவை சேர்ந்த மரியா ஷரபோவா, சுமார் 26 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதுவரை சம்பாதித்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு உலக டென்னிஸ் தர வரிசையில் முதலிடம் பிடித்திருந்தார்.

மெல்டோனியம்,  'வடா 'என்று அழைக்கப்படும் சர்வதேச ஊக்க மருந்து கண்காணிப்பு மையத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மரியா ஷரபோவா கடந்த 2004-ம் ஆண்டு,  தனது 17 வயதில் கிராண்ட்ஸலாம் பட்டம் வென்று சாதனை படைத்தவர். இதற்கிடையே நைக் நிறுவனம் அவருக்கு வழங்கிய ஸ்பான்ஷர் ஷிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ