Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாம்பியன்ஸ் லீக் : ரியல்மாட்ரிட்டிடம் ரோமா வீழ்ந்தது!

சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் ரோமா அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ரோம் நகரில் நடந்த 2வது லெக் ஆட்டத்தில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 64வது நிமிடத்தில் ரெனால்டோவும் 68வது நிமிடத்தில் ரோட்ரிகசும் இரு கோல்கள் அடித்தனர். ஏற்கனவே நடந்த முதல் லெக் ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்ததால், 4-0 என்ற ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதிக்குள் நுழைந்தது.


பார்சிலோனா புதிய மைதானம்


இதற்கிடையே பார்சிலோனா அணி தனது நியூகேம்ப் மைதானத்தை புதியதாக பொலிவுற கட்ட முடிவு செய்துள்ளது. தற்போது உலகின் மிகப் பெரிய கால்பந்து மைதானங்களில் ஒன்றான நியூகேம்ப் மைதானத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும்.

புதிய மைதானத்தின் கட்டுமானப்பணிகள் 2017ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் நிறுவனமான நிக்கென் செக்காய் இந்த பணிகளை மேற்கொள்கிறது.




 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ