Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிர்மூலமாக்க நியூசிலாந்து தயாரா? - சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 3)

சிறந்த வீரர்கள், அமைதியான வீரர்கள், வசை சொற்கள் வீசாத ஜென்டில்மேன்கள், அதிரடியும் ஆக்ரோஷமும் கொண்டவர்கள், சிக்ஸர் பிரியர்கள், ஆவேச வேகப்பந்து வீச்சாளர்கள் என உலகின் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஓர் அணி, நியூசிலாந்து. கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் நியூசிலாந்துக்கு ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு முறை கூட ஐ.சி.சி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை நியூசிலாந்து வென்றதே இல்லை.

பிரண்டன் மெக்குல்லம், ஷேன் பாண்ட், டேனியல் வெட்டோரி என கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த பல வீரர்களை நியூசிலாந்து உற்பத்தி செய்திருக்கிறது. ஆனால், ஓர் அணியாக சேர்ந்து ஏன் கோப்பையை வெல்லமுடியவில்லை என்பதன் ரகசியம் இன்னும் நியூசிலாந்துக்கே பிடிபடவில்லை. நியூசிலாந்து அணிக்கு பிளஸ், மைனஸ் எல்லாமே சொந்த ஊர் ஆடுகளங்கள்தான். சொந்த ஊரில் எந்த போட்டி நடந்தாலும் அதிரடி அபார வெற்றிகளை குவிக்கும் நியூசிலாந்து அணியால், மற்ற நாடுகளில் உள்ள பிட்சில் விளையாடும்போது சிங்கிள் வெற்றிக்கே தடுமாறுகிறது. இதுதான் வரலாறு. ஆனால், இந்த வரலாற்றை கொஞ்சம் அசைத்து பார்த்தார் பிரண்டன் மெக்குல்லம். கடந்த இரண்டு வருடங்களாக பிரண்டன் மெக்குல்லம் தலைமையில் அயல் நாடுகளில் போட்டிகளை வெல்ல ஆரம்பித்துள்ளது நியூசிலாந்து அணி.

கடந்த ஆண்டு ஒருதின உலகக் கோப்பையில் மிகவும் அக்ஸ்ரசிவ் மனப்பான்மையுடன் வியூகங்களை வகுத்து, அதிரடியாக பைனலில் நுழைந்தது நியூசிலாந்து அணி. நல்ல மைதானமான மெல்போர்னில் முதலில் பேட்டிங் பிடித்தது நியூசிலாந்து. முதல் ஓவரில் மெக்குல்லம் அவுட்டாகும்போதே நியூஸியின் கையில் இருந்து கோப்பை நழுவ ஆரம்பித்துவிட்டது. ஆஸ்திரேலிய மண்ணுக்கு ஏற்றவாறு, எதிரணியை பொறுத்து சில நேரம் வியூகங்களை மாற்றி விளையாடினால்தான் வெற்றி பெற முடியும். ஆனால்,  வலுக்கட்டாயமாக ஒரே பார்முலாவை கடைப்பிடித்து விளையாடியதால் நியூஸிலாந்து அணி தோல்வியை தழுவியது.

உலகக் கோப்பைக்கு பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணங்களில் சிறப்பாகவே விளையாடியது நியூசிலாந்து. அதன் பின்னர் இலங்கை, பாகிஸ்தான் அணியை சொந்த ஊரில் வறுத்தெடுத்தனர் நியூசி வீரர்கள்.

நியூசிலாந்து அணியில் தற்போது பிரண்டன் மெக்குல்லம் இல்லை. அவரது திடீர் ஓய்வு காரணமாக சற்றே சில படிகள் பின்னிறங்கி உள்ளது நியூசிலாந்து அணி. டி20 போட்டிகளை பொறுத்தவரையில் நியூசிலாந்து எப்படி விளையாடும் என யாராலுமே கணிக்க முடியாது. திடீரென்று இரண்டு வீரர்கள் அடுத்தடுத்து வேகமான அரைசதம் அடித்து சாதனை படைப்பதும், சில சமயங்களில் இரண்டு விக்கெட் விழுந்துவிட்டால் படுத்தே விடுவதும் நியூசிலாந்து அணியில் மட்டுமே நடக்கும்.

நியூசிலாந்து அணியில் மரண ஹிட்டர்கள் இருக்கின்றனர். குப்டில், முன்ரோ, கோரே ஆண்டர்சன் ஆகியோர் பக்கா டி20 ஸ்பெஷலிஸ்ட்கள். பேட்டிங்கில் நியூசிலாந்து அணி பக்கா மாஸ் காட்டினாலும், பவுலிங்கில் வீக் தான். இந்திய பிட்ச்களை கருத்தில் கொண்டு அணியில் இஷ் சோதி எனும் சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்திருக்கிறார்கள். சோதி யார் தெரியுமா? இந்திய மண்ணில் பிறந்தவர் தான். பஞ்சாபில் பிறந்து பின்னாளில் நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார். நியூசிலாந்து அணி மலை போல இஷ் சோதியை நம்பியிருக்கிறது. டி20 உலகக் கோப்பைகளில்  நியூசிலாந்து அணி இதுவரை அரையிறுதியை தாண்டியதில்லை. பெரும்பாலான சமயங்களில் அரையிறுதிக்கு கூட தகுதி பெற்றதில்லை. இந்திய பிட்ச்களில் பெங்களூருவை தவிர மற்ற அனைத்து பிட்சும் சற்று பெரிதாகவே இருக்கும். நியூசிலாந்தில் குட்டி பிட்ச்களில் விளையாடி பழக்கப்பட்ட வீரர்களால், இந்திய மண்ணில் ஜொலிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

கேன் வில்லியம்சன் தற்போது முழு நேர கேப்டனாகிவிட்டார். இளம் வீரர். வில்லியம்சன் இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடியவர். வில்லியம்சன் மட்டுமே நியூசிலாந்து அணியில் நிலைத்து நின்று பொறுப்பாக விளையாடும் ஒரே வீரர். கேன் வில்லியம்சன் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதியை அடைந்துவிட்டாலும், தற்போது கூடுதலாக கொடுக்கப்பட்ட கேப்டன் பொறுப்பை இனி வில்லியம்சன் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பார்ப்போம். பல  ஆண்டுகளாக கிடைக்காத உலகக் கோப்பை எனும் கனியை, இம்முறை வில்லியம்சன் நிச்சயம் நியூசி மண்ணுக்கு எடுத்து வருவார் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் கிவி மக்கள்.



இந்த உலகக்கோப்பையில் கிவிக்கள் படைக்கப்போகும் சாதனைகளுக்காக  காத்திருக்கிறோம்.

-பு.விவேக் ஆனந்த்

வடிவமைப்பு: ராஜு முருகேசன்

இந்த தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்...

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close