Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதுவும் இந்தியாவில்தான் : ஆண்கள் கூடைப்பந்து அணிக்கு பயிற்சி அளிக்கும் பெண் பயிற்சியாளர்!

ந்திய கூடைப்பந்து லீக்கில் பங்கேற்கும் ஹரியானா கோல்டு அணியின் பயிற்சியாளர் ஷிபா மேகன். 8 அணிகள் விளையாடும் இக்கூடைப்பந்து லீக்கின் இரு பெண் பயிற்சியாளர்களுள் இவரும் ஒருவர்

அமெரிக்காவின் புகழ்பெற்ற என்.பி.ஏ கூடைப்பந்துத் தொடரைப்போல இந்தியாவிலும் கடந்த ஆண்டு முதல் யு.பி.ஏ ஆண்கள் கூடைப்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் பெங்களூரு பீஸ்ட் அணிக்கு பிரசன்னா ஜெயஷன்கர் பெங்களூரு பீஸ்ட் ஹரியானா கோல்டு அணிக்கு ஷிபா பேகன் என இருவர்
மட்டுமே பெண் பயிற்சியாளர்கள். இந்திய தேசிய அணியில் விளையாடியவரான ஷிபா தேசிய கூடைப்பந்து போட்டிகளில் சர்வீசஸ் மற்றும் டெல்லி அணிகளுக்காக விளையாடி 7 தங்கம் மற்றும் 8 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்திய அணிக்காக காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த யு.பி.ஏ தொடரில் இதுவரை விளையாடியுள்ள அனைத்துப் போட்டிகளிலும் தோற்றுள்ள ஹரியானா
கோல்டு அணியை வெற்றிப்பாதைக்குத் திருப்புவதில் தற்போது அவர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

ஹரியான அணிக்கான தோல்விக்கான காரணங்களை ஷிபா கூறுகையில்,  ''அணியில் இளம் வீரர்களே அதிகமாக இருப்பதாலும், அவர்களுக்கு அனுபவம் குறைவாக இருப்பதாலும் நல்ல ஒருங்கிணைப்பு இல்லாமல் திணறி வருகிறது. “இந்தத் தோல்வியால் வீரர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர். அதிலும் சீனியர் வீரர்கள் விரக்தியடைந்துள்ளனர். தமது தவறுகளால் வீழ்ந்துவிடுவோமோ என அஞ்சுகின்றனர். எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. எனக்கும் தான் பிரச்சனை உள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு அணிக்காக போராட வேண்டும் என்று நான் கூறுவதை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். நான் சிலமுறை கோபமாகப் பேசினாலும், என் அறிவுரைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

பெண்ணாக இருந்தாலும் ஆண்கள் அணிக்கு பயிற்சி அளிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ஆண்களுக்கு ஈகோ அதிகமாகவே இருக்கும். அதைக் காயப்படுத்தினால் அவர்களால் தம்மை வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். அதை மதித்து நான் அவர்களது ஈகோவைத் தொடுவதில்லை. எனவே என் வேலையை அது எளிதாக்கிவிடுகிறது. ஒரு வீரரிடம் 4 நிமிடம் மட்டுமே பந்து கையில் இருக்கும். மத்த 36 நிமிடங்களில் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் தான் திணறுகின்றனர். பந்தை கையாளும் விதத்தை  அவர்களுக்குச் சொல்லித் தருவதில் தான் நான் கவனம் செலுத்தி வருகின்றேன்'' என்றார்.

போட்டிகளின் டைம்-அவுட்களின் போது வீரர்களை ஆறுதல் படுத்துவதாகட்டும், தனது கோபத்தை வெளிப்படுத்து அவர்களது ஆற்றலைத் தூண்டுவதிலாகட்டும், தான் ஒரு பெண்ணென்று தன்னை ஒதுக்கிக்கொள்ளாமல், அணியின் ஒவ்வொரு வீரரோடும் தன்னை அந்நியோனியமாக்கிக்கொண்டு செயல்படுகிறார் ஷிபா. போட்டிகளில் தோற்பதால் விரக்தியோடு தனது கோபத்தை வீரர்களிடம் வெளிக்காட்டாமல், அடுத்த போட்டிக்கு ஊக்குவிப்பதை மட்டுமே அவரது பணியாய்க் கொண்டுள்ளார்.

ஹரியானா அணி வேண்டுமானால் போட்டிகளில் தோற்றிருக்கலாம், ஆனால் ஆண்கள் அணிக்கு ஒரு பெண்ணை பயிற்சியாளராக்கியதன் மூலம் ஸ்போர்ட்மேன்ஷிப்  வெற்றி பெற்றிருக்கிறது . பல்வேறு விளையாட்டுகளில் சாதித்த பெண்களும் ஓய்வுக்குப் பின்னர் காணாமல் போய்விடுகின்றனர். விளையாட்டிற்கான அவர்களது பங்களிப்பு அதோடு முடிந்து விடுகிறது. அதையெல்லாம் தாண்டி ஷிபா போன்ற வெற்றி வீராங்கனைகள் பயிற்சியாளராவது மற்றவர்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கிறார்.


 “மிகப்பெரிய யுத்தத்தை வெல்ல பல சிறு போர்களில் தோற்றுத்தான் ஆக வேண்டும்” எனத்  தங்கள் அணியின் தோல்வியையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் ஷிபா, இதே எனர்ஜியோடு செயல்பட்டு அடுத்த சுற்றுகளில்  வேற்றி பெற வாழ்த்துவோம்.

மு.பிரதீப் கிருஷ்ணா

(மாணவப் பத்திரிகையாளர் )

எடிட்டர் சாய்ஸ்