Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தெறிமாஸ்' காட்டுமா வெஸ்ட் இண்டீஸ் - சிக்ஸர் பீவர் (மினி தொடர் -5)

லகில் நடக்கும்  ஐ.பி.எல் முதலான அத்தனை  டி20 லீக்களிலும் 'தெறிமாஸ்'  காட்டும் சிறுத்தைகள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தான் இருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு   உலககோப்பை இறுதிப்போட்டியில்   வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. கிரிக்கெட் உலகில்  அசைக்க முடியாத டானாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அதன் பின்னர் இறங்குமுகத்தையே சந்தித்தது. லாரா, கூப்பர், கெய்ல் என  பல்வேறு சிறந்த வீரர்கள்  அணிக்கு வந்தாலும் உலககோப்பையில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறமுடியாமல் பரிதாபமாக வெளியேறிக்கொண்டிருந்தது.
 இந்நிலையில்,  கடந்த 2012 உலககோப்பையில் திடீரென விஸ்வரூபம் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். சுழற்பந்துக்கு சாதகமான மைதானங்களில் சுமாரான பெர்பார்மன்ஸை காட்டும் அணி என்பதால் 2012ம் ஆண்டு இலங்கையில் டி20 உலககோப்பை நடப்பதற்கு  சில நாட்கள்  முன்புவரை வெஸ்ட் இண்டீஸ் அரையிருதிக்கு தகுதி பெற்றாலே பெரிய சாதனை என  பலரும் கணித்திருந்தார்கள். ஆனால்  வெஸ்ட் இண்டீஸ் வேற லெவலில் விளையாடியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை நொறுக்கி இறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே வெறும் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி கோப்பையை கைப்பற்றியது  டேரன் சாமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி.


சரி விஷயத்துக்கு வருவோம்! இப்போது வெஸ்ட் இண்டீஸ் எப்படியிருக்கிறது?  கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடனான மோதலால் கெயில், பிராவோ  முதலான  பல வீரர்கள் அணியை விட்டு விலகினார்கள். இதனால் 2012 இல் கிடைத்த லைம்லைட்டை அதன் பின்னர் தவறவிட்டது வெஸ்ட் இண்டீஸ். இந்நிலையில் அதிரடியாக 2012 உலககோப்பையில் அணியில்  இருந்த பத்து வீரர்களை மீண்டும் அணிக்குள் சேர்த்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம். எனினும் பொல்லார்ட், சிம்மன்ஸ், சுனில் நரைன் ஆயோர் வெவ்வேறு காரணங்களால் அணியில் இருந்து  விலகிவிட்டார்கள்.
 


உலகக் கோப்பைக்கு என  ஃபார்ம்  ஆகியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல அபாயகரமான   அதிரடி வீரர்கள் இருந்தாலும், இவர்கள் எல்லோரும் சேர்த்து ஓரிரு சர்வதேச போட்டி கூட விளையாடாமல் நேரடியாக உலககோப்பை தொடருக்கு வந்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த  இந்தியாவுடனான பயிற்சி போட்டியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லாவற்றிலும் சொதப்பியது வெஸ்ட் இண்டீஸ். எனவே  குறுகிய காலத்தில் 11 பேர் கொண்ட சிறந்த அணி உருவாகிவிடுமா என்பது கேள்விக்குறிதான். இந்தியாவில் தனிப்பட்ட முறையில் பல்வேறு வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தாலும், ஓர் அணியாக சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை இந்திய மண்ணில் ஜொலித்ததில்லை.

 


சரி, பிளஸ் பாயிண்டுகளே இல்லையா?  கண்டிப்பாக இருக்கிறது. டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் அணியில் இருக்கிறார். கிறிஸ் கெயில் மட்டும் பார்முக்கு வந்து வெளுக்க ஆரம்பித்துவிட்டால் உலகின் எப்பேர்பட்ட சிறந்த  பந்துவீச்சாளராலும் அவரை கட்டுப்படுத்துவது  கடினம். பிராத்வொயிட், சார்லஸ் போன்ற வீரர்களும் சிறப்பாக விளையாடகூடியவர்கள். ஆல்ரவுண்டர்கள் பிராவோ, சமி, ரஸ்ஸல் ஆகிய மூவரும் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துருப்புச்சீட்டுகள். ஐ.பி.எல்.லில்   சி.எஸ்.கே வுக்கு பிராவோவும், கொல்கத்தாவுக்கு ரஸ்ஸல்லும் மேட்ச் வின்னராக திகழ்ந்தவர்கள். எனவே ஐ.பி.எல்.லில் ஆடிய அனுபவத்தை வைத்து இம்முறை உலகக்கோப்பையில்  கலக்குவார்கள் என  எதிர்பார்க்கலாம்.
 டி20 போட்டிகளை பொறுத்தவரையில் பேட்டிங், பந்துவீச்சையும் விட மிகமுக்கியமானது  பீல்டிங். அபாரமான பீல்டிங் இருந்தாலே பேட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கு சுமை குறையும் என்பார்  இந்திய அணியின் கேப்டன் தோனி. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உடலை வளைத்து நெளித்து, பறந்து எவ்வளவு கடினமான கேட்ச்சாக இருந்தாலும் ஈசியாக பிடித்து ஆட்டம் போடுவார்கள். பேட்டிங், பவுலிங்கில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி விளையாடினால் ஏப்ரல் மூன்றாம் தேதி இரவு  பதினோரு மணியளவில் வெஸ்ட் இண்டீஸ்  கோப்பையை தூக்குவதை யாராலும் தடுக்க முடியாது.- பு.விவேக் ஆனந்த்

வடிவமைப்பு - ராஜு முருகேசன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close