Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுரேஷ் ரெய்னா ஏன் தற்கொலை செய்ய நினைத்தார் தெரியுமா?

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், குஜராத் லயன்ஸ் ஐ.பி.எல் அணியின் கேப்டனுமான சுரேஷ் ரெய்னா,  ஒருகாலத்தில் தான் தற்கொலை செய்துகொள்ள எண்ணியதாகக் கூறியுள்ளார். ராகிங் கொடுமையால் தனது இளமைப் பருவத்தில் தான் சந்தித்த தர்மசங்கடங்களைப் பற்றி சமீபத்தில் மன திறந்துள்ளார் சி.எஸ்.கே வின் சூப்பர் மேன்.

ராகிங் கொடுமைகள் நாம் நாட்டில் மட்டுமல்லாது உலகெங்கும் நடக்கும் ஒன்றே. கல்லூரிகளுக்குப் புதிதாகச் சேருபவர்களுக்கு பழைய மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட வேண்டுமென்று நட்பு ரீதியாக தொடங்கிய இச்செய்கை,  ஒரு கட்டத்தில் வன்மத்தின் உச்சமாக மாறியதால் தேசமெங்கும் ராக்கிங் தடை செய்யப்பட்டது. கல்லூரிகளில் மட்டுமின்றி,  பள்ளிகளிலும் இவை நடைபெற்று வந்தவையே. ஒரு சிலர் அதைத் தாண்டி வந்தாலும் மெல்லிய மனம் படைத்த சிலர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அப்படி ஒரு கட்டத்தில் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தாராம் சுரேஷ் ரெய்னா.


ஆரம்பத்தில் தனது துடிப்பான ஃபீல்டிங்கிற்காகப் பேசப்பட்ட ரெய்னா, பின்னாட்களில் பேட்டிங்கிலும் ஜொலித்தார். 8 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில்,  எந்த வித ஆட்சேபனையும் இன்றி சிறந்த பேட்ஸ்மேன் அந்தஸ்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும் இவர்,  சிறு வயதில் சந்தித்த அவமானங்கள் ஏராளம். ஒருமுறை கிரிக்கெட் மேட்சிற்காக ரயிலில் பயணித்துள்ளார் ரெய்னா. குளிர் தெரியாமல் இருப்பதற்காக செஸ்ட்-கார்டு முதலிய உபகரணங்களை அணிந்து கொண்டு உறங்கியுள்ளார். திடீரென்று மார்பின் மீது பாரம் கூட, கண் விழித்தவருக்கு பெரும் அதிர்ச்சி. ரெய்னாவின் கைகள் கட்டப்பட்டிருக்க, அவரது மார்பில் அமர்ந்து முகத்தின் மீது சிறுநீர் கழித்துள்ளான் ஒரு சிறுவன்.

அதுமட்டுமல்லாமல் லக்னோ ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்த போது, சக மாணவர்கள் சிலர் அவரையும் அவரது நண்பனையும் ஹாக்கி மட்டையால் தாக்கியுள்ளனர். அதில் ரெய்னாவின் நண்பர், கிட்டத்தட்ட கோமா நிலைக்கே சென்றுவிட்டாராம். இப்படி பலமுறை பலராலும் அவமானப்படுத்தபட,  தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்னம் 13 வயதிலேயே ரெய்னாவின் மனதில் தோன்றியுள்ளது. அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு ஒரு வருடம் அங்கு தங்கினாலும், கடைசியில் மிகவும் விரக்தியடைந்து அந்த விடுதியிலிருந்து வெளியேறிவிட்டாராம் ரெய்னா. ஆனால் தனது சகோதரர் சமாதானப்படுத்த இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் சேர்ந்துகொண்டாராம்.



ஒருவேளை அன்று ரெய்னா அந்த தவறான முடிவை எடுத்திருந்தால்? இந்திய அணிக்கு ஒரு நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிடைத்திருக்க மாட்டார். சென்னை அணி இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன் ஆகியிருக்காது. ராகிங் போன்ற கொடுமைகள் இன்னும் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பிரதீப் கிருஷ்ணா
( மாணவர் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ