Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோனி 7, கோலி 18, அஸ்வின் 99 ஏன்! ஜெர்சி ரகசியம் சொல்லும் இந்திய கில்லிகள்! - வீடியோ

கிரிக்கெட் வீரர்களின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று ஜெர்சி எண். தோனியின் 7ம் ந‌ம்பர் ஜெர்சி துவங்கி புதிதாக அணிக்கு அறிமுகமாகியுள்ள ஹர்திக்பாண்ட்யாவின் 228ம் நம்பர் ஜெர்சி வரை மபர் ரகசியம் என்ன என்பதை கூறியிருக்கிறார்கள்.

தோனி தனது பிறந்த தினமான 7ம் தேதியை குறிக்கும் வகையில் 7ம் நம்பர் ஜெர்சியையும், ரோஹித் ஷர்மா தனது அம்மா 19வதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் ராசியான எண் என்று 45ம் நம்பர் அளித்ததாகவும் கூறியுள்ளார்.



கோலி தனது ஜெர்சி எண்களுக்கு பின்னால் பெரிய ராசியெல்லாம் ஒன்றுமில்லை. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் எனக்கு இந்த எண் வழங்கப்பட்டது. அந்த உலகக் கோப்பையை வென்று தான் அணியில் இடம்பிடித்தேன். அதனால் அதே எண்ணில் தொடர்கிறேன் என்றார். அஜின்க்யா ராஹானே தனது ராசி எண் 9 என்றும் அதனால் கூட்டுத்தொகை 9 வருவது போல 27 என வைத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

யுவராஜ் சிங்கும் தனது பிறந்த தினம் 12-12 என்றும் மதியம் 12 மணிக்கு பிறந்ததால் 12 என ஜெர்சி நம்பர் வைத்து கொண்டதாக கூறினார். ஜடேஜாவின் பிறந்த தின கூட்டுத்தொகை 8ம், தவானின் குழந்தையின் பிறந்த தினம் 25. அதனால் இருவரும் அந்த எண்களை தங்கள் ஜெர்சி எண்ணாக வைத்துள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவின் அதிகபட்ச ஸ்கோர் 228. அதனால் அதனை தனது ஜெர்சி எண்ணாக வைத்துள்ளாராம்.


இதனையெல்லாம் விட அஸ்வினின் ஜெர்சி ரகசியம் சுவாரஸ்யமானது. அவரது பள்ளியில் அவரது வரிசை எண் 9. அதனால் 9 என்ற எண்ணை வைத்து கொள்ள ஆசை தெரிவித்திருக்கிறார். ஆனால் பார்த்திவ் படேல் அந்த எண்ணை தர மறுக்க 99 என வைத்து கொண்டுள்ளார் அஸ்வின். இந்த எண்ணை இவருக்கு முன் சச்சின் மற்றும் கங்குலி பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களை விட இன்னொருவர் இந்திய அணியில் இருந்தார் அவருக்கு ஜெர்சி எண்ணே கிடையாது. யார் என்று கெஸ் செய்யுங்கள் பார்ப்போம்.

 

 

Numbers and Cricket go hand in hand - here's the story of why No. 7 for MS Dhoni, 18 for Virat Kohli, 45 for Rohit...

Posted by Indian Cricket Team on 8 March 2016

எடிட்டர் சாய்ஸ்

MUST READ