Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நாங்கள் கோலி ரசிகைகள்'- குஷியான பாக். மகளிர் அணி கேப்டன்!

எங்கள் வீராங்கனைகள் பற்றி கூறினால் அனைவரும் வீராட் கோலி ரசிகைகள் என்று பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் சானா மிர் குஷியாக பதில் அளித்துள்ளார்.

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, நாளை இந்தியாவில் தொடங்குகிறது. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவு ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

முதல் நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியா– வங்கதேசம், நியூசிலாந்து– இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் சனாமிர்ருக்கு பிடித்த வீரர்,  இந்திய அணி கேப்டன் தோனி. அதே நேரத்தில் மற்ற வீராங்கனைகள் அனைவரும் வீராட் கோலியின் ரசிகைகள்.

இது குறித்து சானா மிர் கூறுகையில், "நாங்கள் வெகு தூரம் முன்னேறி வந்து இருக்கிறோம். பாகிஸ்தானில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது நடுத்தரமாகவே உள்ளது. இப்போது பெண்கள் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் நாங்கள் அதிக அளவு கருத்து மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளோம். ஒருகாலத்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது பாகிஸ்தானில் கடினமாக இருந்தது.

தற்போது பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கிரிக்கெட் விளையாடுங்கள் என சொல்கிறார்கள். தோனியும், வீராட் கோலியும் பாகிஸ்தானில் பிரபலம். எங்கள் வீராங்கனைகள் பற்றி கூறினால், அனைவரும் வீராட் கோலி ரசிகைகள். தனிப்பட்ட முறையில் இந்தியாவை வழி நடத்தி செல்லும் தோனியைத்தான் எனக்கு பிடிக்கும். அவர் தனது தலைமை பணியை திறம்பட செய்கிறார். அவர் ஒரு பயனுள்ள ஜூனியர் வீரர்கள் கொண்ட அணியாக மாற்றி உள்ளார்" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ