Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் மல்லையா விலகல்!

புதுடெல்லி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பதவியை விஜய் மல்லையா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது, வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில்  வழக்குத்  தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ. அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்று விட்டார்.

இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் மல்லையா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக விஜய் மல்லையா இருந்து வருகிறார். இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பதவியை மல்லையா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியுள்ளது.

மேலும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பொறுப்பாளராக ரஸ்செல் ஆடம்ஸ் இருப்பார் எனவும், அணியின் உரிமையாளர் அமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், மல்லையாவின் மகன் சித்தார்த் பொறுப்பு ஏற்கும் வரை, விஜய் மல்லையா கவுரவ தலைமை ஆலோசகராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்செல் ஆடம்ஸ் இதுவரை பெங்களூரு அணிக்குரிய கிரிக்கெட் அகாடமியின் துணை தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ