Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸ்திரேலிய அணியின் கோப்பை ஆசை கைகூடுமா? சிக்ஸர் ஃபீவர் - மினி தொடர் 7

 
ந்து ஒருதின உலகக்கோப்பையை வென்றுவிட்ட ஆஸ்திரேலிய அணியால்,  இன்னும் ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை.  கிரிக்கெட்டில்  பெரும்பாலான சாதனைகளுக்கு சொந்தமான ஆஸ்திரேலிய அணியின் நிறைவேறாத ஆசை டி உலகக் கோப்பையை வெல்வதுதான்.  
 
 
 
 இருபது ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் சூத்திரத்தை இன்னமும் ஆஸ்திரேலிய அணியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐ.பி.எல்லாக இருந்தாலும் சரி,  பிக்பாஷ் போட்டிகளாக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலிய வீரர்களின் ஆதிக்கம் எங்குமே நிறைந்திருக்கும். ஷேன் வாரன், ஸ்மித், வார்னர், வாட்சன், பெய்லி என பலர் ஐ.பி.எல்லில் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றனர். 
 
 
 
 
திறமையான வீரர்கள் இருந்தாலும் ஆஸ்திரேலியாவால் உலககோப்பையை ஏன் வெல்ல முடியவில்லை என பலருக்கும் ஆச்சர்யம் இருக்கவே செய்கிறது. இந்திய மண்ணில் பல ஆஸ்திரேலிய வீரர்கள்,  டி-20 களில்  விளையாடி பழகியவர்கள் என்பதால் இம்முறை உலகக்கோப்பையை வென்றே  தீருவது  என்ற முடிவில் வந்திருக்கிறார்கள். சரி,ஆஸ்திரேலிய அணியில் பலம் பலவீனம் என்ன? 
 
 
பலம்:
வலுவான பேட்டிங் வரிசையும், அதிரடியான பேட்ஸ்மேன்களும், சிறந்த ஆல்ரவுண்டர்களும் அணிக்கு பலம். ஆஸ்திரேலிய அணியில் எந்த ஒரு குறிப்பிட்ட வீரரை நம்பியும் அணி இல்லை என்பதால் தெம்பாக  வலம் வருகிறது. உஸ்மான் கவஜா,  பின்ச், வார்னர், வாட்சன்  என நான்கு பேரில் யாரை தொடக்க வீரர்களாக  களமிறக்குவது  என கேப்டன் ஸ்மித் குழம்பிபோய் உள்ளார். ஏனெனில் நான்கு பேரும் சிறந்த தொடக்க வீரர்கள்.  நடுவரிசையில் ஸ்மித், மேக்ஸ்வெல் பலம் சேர்க்கின்றனர். தொடக்க ஜோடிகள் நன்றாக விளையாடி கொடுத்தால், கடைசி கட்டத்தில் இருபது பந்துகள் சந்தித்தாலே அபாரமாக சிக்ஸர்கள், பவுண்டரிகள் விளாசி ரன்களை குவிக்கும் ஆற்றல் உள்ளவர் மேக்ஸ்வெல். இந்தியாவிடம் சொந்த மண்ணில் வொயிட் வாஷ் ஆன்பாலும்   இரண்டு வாரத்துக்கு முன்பு நடந்த தென்னாபிரிக்கா தொடரை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. டி-20யில் வலிமையான அணி என கருதப்படும் தென்னாபிரிக்காவை அசத்தலாக வென்றதால் தன்னம்பிக்கையோடு இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. 
 
 
 
பலவீனம்:
 
மோசமான பவுலிங்தான் மிகப்பெரிய பலவீனம். எளிதாக 150 ரன்களுக்கு மேல் விட்டுத்தந்துவிடுகிறார்கள் ஆஸ்திரேலிய பவுலர்கள். ஜான்சன்  ஓய்வு பெற்றுவிட்டதாலும், மிட்செல் ஸ்டார்க் காயத்தால் அவதிப்படுவதாலும் பவுலிங் டிப்பார்ட்மெண்ட் சோடை  போயிருக்கிறது. பால்க்னர் தவிர நம்பிக்கை தரும் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. ஹாசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்றோர் அதிக ரன்களை விட்டுத்தந்து விடுகிறார்கள். இந்தய மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு முக்கிய இடம் உண்டு. ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல்,ஸ்மித் போன்ற பகுதி  நேர சுழற்பந்து வீச்சாளர்கள் தவிர,  தரமான அனுபவமிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது பெரிய  மைனஸ். சேஸிங்கில் ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் வீக்தான். கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே 160 ரன்களை தாண்டிய இலக்கை துரத்தி வெற்றி பெற்றிக்கிறது. கடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில்தான் சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது ஆஸ்திரேலிய அணி.
 
 
 
இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து என வலுவான அணிகள் இருக்கும் பிரிவில் இருப்பதால் ஆஸ்திரேலியா, அரையிறுதிக்கு முன்னேறுவது சாதாரண விஷயமில்லை. ஆனால் அரையிறுதி வரை முன்னேறிவிட்டால்,  அதன் பின்னர் மீண்டும் ஒரு கோப்பையை மிஸ் பண்ணிவிடக்கூடாது என கவனமாக இருக்கிறது ஆஸ்திரேலியா.  
 
- பு.விவேக் ஆனந்த் 

வடிவமைப்பு  - ராஜு முருகேசன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ