Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

30 வயதுக்குட்பட்டவர்களுக்கு விராட் கோலி சொல்லும் 5 பாடங்கள்!

ங்கள் வயது 30க்குள் இருந்து அலுவலகத்தில் பெரிய இலக்குகளை அடைய நினைப்பவரா நீங்கள். அப்படியென்றால் நீங்கள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் இருந்து இந்த 5 விஷயங்களை கற்க வேண்டியது அவசியம். இலக்குகளை அடைவதில் தொடங்கி உங்கள் நெகட்டிவ் விஷயங்களை பாசிட்டிவாக மாற்றுவது வரை கோலியின் அணுகுமுறை நிறைய மேலாண்மை தத்துவங்களோடு ஒத்து போகிறது.

இலக்குகளை விரைவாக எட்டுங்கள்:

அலுவலகம் உங்களுக்கு நிர்ணயித்த இலக்குகளை கொடுக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க முயற்சி செய்யுங்கள். உதாரணமாக ஒரு வருடத்தில் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை 10 மாதத்துக்குள் முடிக்க முயற்சி செய்யுங்கள். இதற்காக நீங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாத இலக்குகளை 25 நாட்களில் முடித்து பழகுங்கள். வருட இலக்கு தானாகவே 10 மாதமாக குறைந்துவிடும். இதையே தான் கோலியும் செய்தார். ஆரம்ப காலத்தில் சச்சின் செய்த விஷயங்கள் அவருக்கு முன்னதாக முடித்தார். அதனால்தான் தற்போது  கோலியின் ஆட்டங்களோடு ஒப்பிட்டால் சச்சின் பின்னால்தான் இருக்கிறார் என்கின்றன புள்ளி விவரங்கள்.

ஒரே மாதிரியாக இருங்கள்:


நீங்கள் பொறுமையாகவோ அல்லது அதிரடியாகவோ வேலைகளை முடிப்பவராக இருக்கலாம். உங்கள் நிலையிலிருந்து மாறி அடுத்த நிலையில் வேலை செய்ய போகிறேன் என்று மாறாதீர்கள். உங்கள் செயல்திறனை அதிகப்படுத்துங்கள். ஆனால் அணுகுமுறையை மாற்றாதீர்கள். உங்களுக்கு சிறப்பாக செய்ய தெரிந்த செயலை மட்டும் செய்யுங்கள். கோலி ஆடிய காலங்களில் டிவில்லியர்ஸ், கெயில் ஆகியோர் 360 டிகிரியில் ஷாட்களை ஆடினாலும், தனக்கு வரும் க்ளாஸிக் ஷாட்களால் 360 டிகிரியையும் கோலி கவர் செய்வது க்ளாஸ்.



விமர்சனங்களுக்கு பயப்படாதீர்கள்:

உங்கள் அலுவலகத்திலோ அல்லது நீங்கள் இருக்கும் குழுவிலோ 'இவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது, 30 வயது கூட ஆகவில்லை, இவரால் இந்த விஷயங்களை செய்ய முடியாது என்ற விமர்சனங்கள் உங்கள் வேலை சிறப்பாக அமையும் போது எழும், இந்த விமர்சனங்களை ஒரு சதவிகிதம் கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களை நம்பி அளிக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்ய தொடங்குங்கள். நீங்கள் மிகப்பெரிய உயரங்களை தொடுவீர்கள். ஆட்டத்தை பார்க்காமல் அனுஷ்கா ஷர்மாவோடு ஊர் சுற்றுகிறார், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை, மைதானத்தில் கோவத்தை வெளிப்படுத்துவது அழகல்ல என்ற விமர்சனங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் செயலை சரியாக செய்து நம்பர் ஒன் வீரராக வலம் வருகிறார்.

தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்யுங்கள்!


ஒருமுறை உங்களது வெற்றியை பதிவு செய்துவிட்டால் அதோடு உங்களை நிறுத்தி கொள்ளாதீர்கள். உங்களிடம் இருந்து இரண்டாவது வெற்றி வரவில்லை என்றால் உங்களது முதல் வெற்றி அதிர்ஷ்டம் ஆகிவிடும். அதனால் தொடர்ச்சியாக உங்களை வெற்றி பாதையில் வைத்திருக்க கடுமையான முயற்சியை மேற்கொள்ளுங்கள். டி20, ஒருநாள் டெஸ்ட் போட்டிகள் என எந்த டாஸ்க்கை கொடுத்தாலும் சரியாகவும், தொடர்ந்தும் செய்வது தான் கோலியிடம் நாம் கற்க வேண்டிய எவர்க்ரீன் பாடம்!



தலைவனுக்கான ஆட்டிட்யூடோடு இருங்கள்!

உங்களைவிட அனுபவமுள்ள ஒருவரை தாண்டி உங்களிடம் தலைமை பண்பு காணப்பட்டால் அதனை காட்ட ஒருபோதும் தயங்காதீர்கள். நீங்கள் தான் தலைவன். உங்களால் மட்டும் தான் இது முடியும் என்ற ஆட்டிட்யூடோடு இருங்கள். தேவைப்படும் இடங்களில் சீனியர், ஜூனியர் பார்க்காமல் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நீங்கள் தலைவனாக இல்லாத இடங்களிலும் நீங்கள் தனித்து தெரிவீர்கள். தோனி போன்ற அனுபவசாலி கேப்டன் இருக்கும் ஒருநாள், டி20 போட்டிகளில் கோலி கெத்தாக இருப்பதற்கு காரணம் அவரது டெஸ்ட் கேப்டன் ஆட்டிட்யூட் தான். தோல்விகளை கண்டு பயப்படாமல் கெத்து காட்டுவதால் தான் கோலி நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.

30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமல்ல, இலக்குகளை தாண்டி தன்னை நிரூபிக்க ஓடும் அனைவருக்குமே கோலியின் பாடங்கள் பொருந்தும். 30 வயதுக்குட்பட்டவர்களால் கோலியை தன்னோடு எளிதாக ஒப்பிட்டு கொள்ள‌ முடியும். 27 வயதுள்ள கோலி இந்திய அணியை வழிந‌டத்தும் போது 30 வயதுக்குள் உங்கள் துறையில் தலைமை பதவியை எட்ட முடியாத என்ன? உங்களது இலக்குகளை துரத்துங்கள்! கமான் பாஸ்!


-ச.ஸ்ரீராம்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ