Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா vs பாகிஸ்தான் - தொடரும் வரலாறு!

சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் எதிரும் புதிருமாகவே இருக்கிறது. உடன்பாட்டை மீறி நம் நாட்டின் எல்லைக்குள் நுழைவது, மக்களைத் துன்புறுத்துவது போன்ற கொடூர செயல்களைக் காலம்காலமாக செய்து வருவதோடு, தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கிறது பாகிஸ்தான்.

என்னதான் இந்தியாவைத் தோற்கடிக்க பலமுறை முயற்சித்தாலும், இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆட்டத்தில்,  1992 முதல் வெற்றியை இந்தியா மட்டுமே உரித்தாக்குகிறது. இந்த ஆண்டும் அவ்வாறு நடந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

மேலும், ஈடன் கார்டனில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த 4 ஆட்டத்திலும், தொடர்ந்து வெற்றியைத் தனதாக்கியிருந்தது பாகிஸ்தான். அந்த சாதனையும் தற்போது இந்தியாவால் முறியடிக்கப்பட்டுள்ளது.

2016 உலகக் கோப்பை போட்டி சூடு பிடித்திருக்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில்,  இந்தியா ஜெயித்ததையே பெரும் வெற்றியாக கொண்டாடுகிறார்கள், இளைஞர்கள்.

இந்தியா vs பாகிஸ்தான்

உலகக் கோப்பையில் 1992-ல் 43 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னியில் இந்தியா வெற்றி பெற்றது.

1996-ல் 39 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரிலும், 1997-ல் 47 ரன் வித்தியாசத்தில் மான்செஸ்டரிலும் வெற்றி பெற்றது, இந்தியா.

அதன் பின் 2003-ல் 6 விக்கெட் வித்தியாசத்தில் செண்டூரியனிலும், டர்பனில் 2007-ல் பௌல் அவுட் ஆனது பாகிஸ்தான். 2007-ல் ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் 5 ரன் வித்தியாசத்திலும், 2011-ல் மொஹாலியில் 29 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

2012, 2014, 2015 முறையே 8 விக்கெட், 7 விக்கெட், 76 ரன்கள் வித்தியாசத்தில் கொழும்பு, மிர்புர், அடிலைட் மைதானங்களில் இந்தியா வெற்றி பெற்றது.

தொடர்ந்து வெற்றியை உலக கோப்பையில் உறுதியாக்கி வந்த இந்தியாவுக்கு, இந்த ஆண்டு லக் ஃபேக்டர் வேலை செய்யுமா என்ற குழப்பம் இருந்து வந்தது. காரணம் 2016 உலகக் கோப்பை போட்டி, பாகிஸ்தான் உடன் ஈடன் கார்டனில் நடைபெற்றது.

ஈடன் கார்டனில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் பாகிஸ்தான் மட்டுமே வெற்றி பெற்று வந்தது. இந்த முறை இந்த காரணத்தினாலே கடும் போட்டி நிலவியது. ஆனால், 19-ம் தேதிய ஆட்டத்தின் தொடக்கத்தில் தடுமாறினாலும், இறுதியில் இந்தியாவே 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் பாகிஸ்தானின் சாதனை முறியடிக்கப்பட்டது.

இதில் கோலி, யுவராஜ் பலமாக ரன்களை குவிக்க, கடைசியாக தோனி அடித்த சிக்சர் வெற்றியை உறுதிப்படுத்தியது. அதில்,  இளம் ஆட்டக்காரர் பாண்ட்யாவின் கேட்ச் அனைவரின் பாராட்டையும் அள்ளிகுவித்தது.

இந்திய மக்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிய இந்திய அணி, உலகக் கோப்பையிலும் வெற்றியைக் குவிக்க வாழ்த்துக்கள்...!

சௌமியா உதயகுமார்

மீம்ஸ் படங்கள்: அசோக் குமார்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ