Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டோனியை முந்திய கோலி!

ந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி,  மைதானத்திலும் சரி வெளியிலும் சரி, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர். அணிக்குத் தேவையானபோது அதைத் தாங்கி நமது ஸ்கோரை தூக்கி விடுவது மட்டுமல்லாது, தற்பொழுது ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டியின் தலைவர் தோனிக்கு சமமான மதிப்புள்ள வீரராக மாறி உள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்திப்படி தோனி தனது பேட்டில் "SPARTANS" எனும் ஸ்டிக்கரை ஒட்ட,  ரூபாய் 6  கோடியை அந்த நிறுவனம் வழங்குவதாக தெரிகிறது. தற்பொழுது வந்துள்ள செய்தியின்படி கோலி தனது பேட்டில்,  MRF  நிறுவனத்தின் ஸ்டிக்கரை ஒட்ட 8 கோடியை அந்த நிறுவனம் வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்புதலின் படி ஆடைகள் மற்றும் காலணிகளை அவர் மைதானத்தினுள் அணிவதாக தெரிகிறது.

ஆனால் மைதானத்திற்கு வெளியே இருக்கும் ஒப்பந்தங்களான விளம்பரங்கள் போன்றவற்றில் தோனி 8 கோடியும், கோலி 5  கோடியும் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.

அணியில் உள்ள மற்ற வீரர்களும் இந்த விஷயத்தில் மோசமில்லை. யுவராஜ் சிங்கிற்கு பூமா நிறுவனம் தங்களது காலணி மற்றும் உடை அணிவதற்காக சுமார் 4  கோடி ரூபாய்  அளிக்கிறது. ரெய்னா மற்றும் ரோஹித் ஷர்மா, தலா 3 கோடியை CEAT  நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை பேட்டில் ஒட்ட பெறுகின்றனர். ஷிகார் தைவானுக்கு  MRF நிறுவனம் 3 கோடி ரூபாயை அவரது பேட்டிற்காகவும் அளிக்கிறது.

சர்வதேச வீரர்களில், இந்திய வீரர்களுக்கு சமமான ஸ்பான்சர் பணம் வாங்கும் வீரர்கள் டி வில்லியர்ஸ் மற்றும் கெயில் மட்டுமே. டி வில்லியர்சின் பேட் ரூ. 3.5 கோடியும் கெயிலின் பேட் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாயும் ஆகும்.

பா.அபிரக்ஷன் (மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ