Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்களாதேஷுக்கு 147 ரன்கள் இலக்கு!

இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதும் டி20 போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி தரப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதுவரை ஒரு தோல்வி ஒரு வெற்றியை பெற்றுள்ள இந்திய அணி முன்னேற வெற்றி அவசியம். அதே நேரம், தொடரில் வெளியேறுவதை தவிர்க்க களம் இறங்குகிறது பங்களாதேஷ் அணி.

முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ரெய்னா 30 ரன்களும், கோலி தவான் முறையே 24,23 ரன்கள் குவித்தனர். பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி இந்திய வீரர்களை திணறடித்தனர். இந்த ஆட்டத்தை  வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
 



இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா இனி வரும் போட்டிகள் அனைத்துமே நாக் அவுட் ஆட்டங்கள் தான் என கூறியுள்ளார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close