Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெற்றிக்கு பின் தோனியை கோபப்படுத்திய கேள்வி இதுதான்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வென்ற பின் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி,  கேப்டன் தோனி கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
 

வங்கதேச அணியை வென்ற பின்,  செய்தியாளர்கள் சந்திப்புக்கு புன்னகையுடன் இந்திய அணி கேப்டன் தோனி வந்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ஆச்சர்யத்துடன் ஆத்திரத்தையும் கிளப்பும் வகையில் அமைந்தது. அதிக ரன் விகிதத்துடன், அரையிறுதி வாய்ப்பினை பிரகாசிக்க செய்யும் வகையில் இந்திய அணி விளையாடி இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், செய்தியாளர் ஒருவர், 'இந்த முடிவில் நீங்கள் எப்படி திருப்தி கொள்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் எரிச்சல் அடைந்த தோனி, "இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சியில்லை என எனக்கு தெரியும்" எனக் கூறினார்.  உடனே, விளக்கமளிக்க செய்தியாளர் முற்பட, அதனை இடைமறித்த தோனி, "நான் சொல்வதை கவனியுங்கள்.  உங்களது குரல், உங்களது கேள்வி மற்றும் நீங்கள் இந்தியா வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடையவில்லை என தெளிவாக தெரிகிறது. ஒரு கிரிக்கெட் போட்டி பற்றி பேசும்போது, அதற்கு விரிவுரை இல்லை.  இது விரிவுரை குறித்த விசயமும் இல்லை" எனக் கூறினார்.

அதன்பின் செய்தியாளரை நிம்மதியடைய செய்யும் வகையில் பேசிய தோனி, "டாஸை இழந்தபின், எங்களால் ரன்களை சேர்க்க முடியாததற்கு என்ன காரணம் என நீங்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும்.  இத்தகைய விசயங்களை நீங்கள் வெளியே அமர்ந்து ஆய்வு செய்யவில்லை எனில் இந்த கேள்வியை நீங்கள் கேட்க கூடாது" என கூறினார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கேள்வியை கேட்பதற்காக யாரும் முன்வராத நிலையில்,  செய்தியாளர்கள் அறையில் நீண்ட நிசப்தம் நிலவியது.  அரையிறுதி போட்டியில் தகுதி பெற வேண்டிய கட்டாய சூழலில், குறைந்த ரன்களே எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பி பிழைத்து இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ