Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்னும் ஒரே போட்டி: அரையிறுதிக்கு முன்னேற இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இன்றைய பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டத்தில் ரசிகர்கள்  நினைத்தது போலவே பாகிஸ்தான் தோற்றுள்ளது. இனி குரூப் பி-யில் யார் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. நியூஸிலாந்து முன்னேறிவிட்ட நிலையில், இந்தியா அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி ரசிகர்களிடன் எழுந்துள்ளது.

இந்தியா அரையிறுதிக்கு முன்னேற ஒரே ஒரு விஷயம் நடந்தால் போதும். வரும் ஞாயிற்றுக்கிழமை மொகாலியில் ஆஸிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலே போதும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

மழை காரணமாக ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டால் இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழக்கும். மொகாலியில் மழை வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய மண்ணிலேயே 3-0 என்று டி20 தொடரில் வொயிட் வாஷ் செய்தது இந்திய அணி. சொந்த மண்ணில் ஆட இருப்பதால் இந்தியாவிடம் கெத்தான வெற்றியை எதிர்பாக்கிறார்கள் ரசிகர்கள்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ