Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்சிலோனா அணியை கட்டமைத்த ஜோகன் கிரைப்!

பார்சிலோனா அணியின் டிக்கி டாகா  பாணியிலான கால்பந்தாட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ஜோகன் கிரைப். டோட்டல் ஃபுட்பால் என்ற புதிய முறையை,  தனது நெதர்லாந்து அணியில் அறிமுகப்படுத்தி உலகையே அதிர வைத்தவர்.  இவர் தனது 68-வது வயதில் புற்றுநோயால் மரணம் அடைந்தார்,

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜோகன் கிரைப்,  கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர்களின் பட்டியலில் முதல் வரிசையில் இருப்பவர். 1970 – 80 களில் தலை சிறந்த வீரராக திகழ்ந்தவர். நெதர்லாந்து அணியில் டோட்டல் ஃபுட்பால் என்னும் புதிய முறையை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக தனது அணியை 1974 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இன்றைக்கும் கால்பந்து உலகில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தனது 19  வருட கால்பந்தாட்ட வரலாற்றில்,  520 போட்டியில் விளையாடி 392 கோல்களை அடித்துள்ளார். இதில் தனது தேசிய அணிக்காக அடித்த  33 கோல்களும் அடக்கம். நெதர்லாந்து அணிக்காக அவர் கோல் அடித்த எந்த ஒரு போட்டியும் தோற்றது கிடையாது என்பது கூடுதல் சிறப்பு. மூன்று முறை சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.


ஒரு வீரராக மட்டுமல்லாது பயிற்சியாளராகவும் கலக்கியவர் ஜோகன் கிரைப். நெதர்லாந்தின் அஜாக்ஸ் அணிக்கும், ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்கும் பயிற்சியாளராக சிறப்பாக செயல்ப்பட்டுள்ளார். பார்சிலோனா அணியில் வீரராகவும் விளையாடிய ஜோகன் கிரைப்,  ஒய்வு பெற்ற பின்பு அந்த அணியின் பயிற்சியாளராகவும் இருந்து, அந்த அணியை கட்டமைத்தார். அந்த அணியின்  டிக்கி டாகா  பாணியிலான கால்பந்தாட்டத்தை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். இவரது காலகட்டத்தில் பார்சிலோனா அணி பெரிய அளவில் வெற்றிகளை குவித்தது.

இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரரான ஜோகன் கிரைப்,  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயுடன் கடுமையாக போராடிய ஜோகன் கிரைப்,  நேற்று பார்சிலோனா நகரில் மரணம் அடைந்தார். ஜோகன் கிரைப் கடுமையான புகை பழக்கம் உடையவர். அந்த புகை பழக்கமே இன்று அவரின் உயிரை பறித்து விட்டது. இவரது மரணம் கால்பந்தாட்ட உலகில் நிரப்ப முடியாத இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

“உங்கள் மீது எப்பொழுதும் எங்கள் அன்பு இருக்கும். தங்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் ” என்று பார்சிலோனா அணி நிர்வாகம்,  தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை  பதிவு செய்துள்ளது.

உலகின் தலைச்சிறந்த வீரரும், ஐந்து முறை சிறந்த வீரருக்கான விருதை வென்றவருமான மெஸ்ஸி,  தனது ட்விட்டர் பக்கத்தில் , “ தங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். தங்களின் மரபு (legacy) என்றைக்குமே இருக்கும்” என்று பதிவு செய்துள்ளார்.

 
Gràcies Johan

Thanks, JohanGràcies JohanGracias, Johan

Posted by FC Barcelona on Thursday, March 24, 2016


-எஸ்.கே பிரேம் குமார்

(மாணவ பத்திரிகையாளர்)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close