Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விராட் கோலி இந்திய அணியின் பாகுபலி!

15ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது. அந்த ஆட்டத்தில் ஒரு ரன்னில் வெளியேறினார் விராட் கோலி. அதற்காக அவரது காதலி அனுஷ்கா ஷர்மா வரை சென்று திட்டி தீர்த்தனர் இந்திய ரசிகர்கள். சரியாக ஒரு வருடம் கழித்து 2016ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி அதே விராட் கோலி அரையிறுதிக்கு ஆஸியை நுழையவிடாமல் வீட்டுக்கு ஒற்றை ஆளாக அனுப்பி வைத்தார். விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த இன்னோரு சச்சின், தொடர்ந்து சிறப்பாக ஆடுவதில் ட்ராவிட், அக்ரஸிவில் கங்குலி என புகழ்ந்து வரும் நிலையில் விராட் கோலி இந்திய அணியின் தனி ஒருவன் என்கிறார் தோனி.

இந்திய அணி டி20 போட்டிகள் தரவரிசையில் நம்பர் 1 அணியாக உலகக் கோப்பையை எதிர் கொண்டாலும், நியூஸிலாந்துடன் தோல்வி, பாகிஸ்தானை கோலியின் ஆட்டத்தால் வென்று, பங்களாதேஷ் ஆட்டத்தில் கடைசி நிமிட திக் திக்கில் ஒரு ரன்னில் வென்று வாழ்வா? சாவா? என ஆஸியை எதிர் கொண்டது இந்திய அணி. முதல் முறையாக இந்த தொடரில்  160 ரன்களை இந்தியா அடிக்க வேண்டும் என்பதே இலக்கு. இந்த போட்டியிலும் ஆபத்பாந்தவன் கோலி தான்.

முதலில் கோலி ஆட வந்த போது இந்தியா ஓரளவுக்கு நிதானமாக தான் ஆடி வந்தது. 4 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்திருந்தது. 8 ஓவர்களில் 50 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அடுத்து ஆட வந்த யுவராஜ் தசைபிடிப்பில் அவதிப்பட இரண்டு ரன்கள் ஓட வேண்டிய இடத்தில் ஒரு ரன் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் கோலி. யுவராஜுடன் 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அதன் பின் தான் தனது ருத்ர தாண்டவத்தை துவங்கினார் கோலி.



எதிர்முனையில் இருந்த தோனி கோலியை ஆக்ரோஷப்படாமல் அமைதியாக இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினாராம். 18 மற்றும் 19 ஓவர்களை ஆஸ்திரேலியா செல்லும் வரை ஆஸி வீரர்கள் மறக்க மாட்டார்கள். அந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 6 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என ஆஸ்திரேலியாவின் கனவை கலைத்தார் கோலி. இந்த அட்டத்தில் இந்தியா எதிர் கொண்டது 115 பந்துகள் அதில் கோலி மட்டும் 51 பந்துகளை எதிர் கொண்டுள்ளார். அதில் 14 பந்துகளில் மட்டுமே அவர் ரன் குவிக்க வில்லை. 9 பவுண்டரிகளில் 2 சிக்ஸர் என ஆஸியை  அலறவிட்டார்.

ஒரு டி20 பேட்ஸ்மேன் காட்டுத்தனமாக ஆட வேண்டும் என்பதையெல்லாம் அசாதாரணமாக உடைத்து க்ளாஸிக் பேட்ஸ்மேனாக இருந்தால் டி20 போட்டிகளில் எதிரணியை கலங்கடிக்க முடியும் என்பதற்கு கோலி முன்னுதாரணம்.


ஜான்ஸனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்:

ஜான்ஸன் இரண்டு தினங்களுக்கு முன் உலகின் தனக்கு பிடித்த 5 பேட்ஸ்மேன்களை ட்விட் செய்துள்ளார். அதில் கோலியின் பெயரை சேர்க்கவில்லை. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை கோலி ஒற்றை ஆளாக வீட்டுக்கு அனுப்பியதால் ரசிகர்கள் ஜான்ஸன் பக்கத்தில் கோலியிடம் அடிவாங்கியதை மறைத்தாலும் அவர் உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துவார். மறக்கவில்லை மறைத்திருக்கிறார் என நெட்டிசன்கள் ஜான்ஸனை வறுத்தெடுத்தனர்.

 


கோலி ஒரு தனி ஒருவன் : தோனி

போட்டிக்கு பின் நடந்த பரிசளிப்பில் தோனியிடம் கோலி ஆடுவதை எதிர்முனையில் நின்று பார்ப்பது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ''நான்கு வருடங்களாக கோலியின் ஆட்டத்தை அதிகம் எதிர்முனையில் நின்று ரசித்திருக்கிறேன். இந்திய அணியில் கடந்த ஒரு வருடமாக கோலியின் பங்களிப்பு அதிகம். ஒட்டுமொத்த இந்திய அணியில் மற்ற வீரர்கள் 35 சதவிகித பங்களிப்பை தருகின்றனர். கோலியை இந்தியா 65 சதவிகிதம் நம்பியுள்ளது. இது மாற வேண்டும் அப்போது தான் கோலியும் அழுத்தத்தை உணரமாட்டார். இந்தியாவும் வெற்றிகளை எளிதில் குவிக்கும் என்றார்.

இந்த ஆட்டத்தை மறக்க மாட்டேன்: கோலி

இந்த ஆட்டம் குறித்து பேசிய கோலி '' நான் யுவராஜ்ஜூடன் இணைந்து ஆடும்போது பதட்டத்தை கட்டுப்படுத்தி ஆடினேன். தோனியுடன் சேர்ந்தவுடன் நான் கொஞ்சம் ஆக்ரோஷப்பட்டேன். தோனி என்னிடன் அமைதியாக இரு. ஆட்டம் நம் பக்கம் தான் உள்ளது. அவரசப்படாதே என அறிவுரை கூறினார். 18 மற்றும் 19 ஓவர்களில் ஆஸியை காலி செய்தோம். எனது வாழ்நாளில் மறக்க முடியாத 3 இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று'' என்றார்.



சச்சின் டெண்டுல்கர்

நரேந்திர மோடி


நம்பர் மேன்!

இந்தியா ரன் சேஸ் செய்து வெற்றி பெற்ற ஆட்டங்களில் கோலியின் சராசரி 122.83

டி20 போட்டிகளில் உலகிலேயே அதிக பேட்டிங் ஆவரேஜ் கோலிக்கு தான்  55.42, இவருக்கு அடுத்து உள்ள ஆரோன் பின்ச்சின் சராசரி 38.96

டி20 சர்வதேச போட்டிகளில் 15 அரைசதம் கடந்த ஒரே வீரர் கோலி தான்.

கோலி நாற்பது ரன்களுக்கு மேல் அடித்த 83 % போட்டிகளை இந்தியா வென்றுள்ளது.

 

 


பாகுபலியா? விராட் கோலியா?

இந்தியா வென்றால் நம் வீரர்களை பாராட்டி வரும் மீம்ஸ்களுக்கு பஞ்சமே இருக்காது. அப்படிப்பட்ட வரிசையில் கோலியை பாகுபலி அளவுக்கும்,  கோலி தான் அடுத்த சச்சின் என்ற அளவுக்கு தெறி மீம்ஸ்களை தெறிக்க விட்டனர்.



மாம்ஸ் இது மீம்ஸ் : மீம்ஸ்களின் தொகுப்பை காண க்ளிக் செய்க


கோலி கற்றுத்தறும் 5 பாடங்கள்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் இருந்து இந்த 5 விஷயங்களை கற்க வேண்டியது அவசியம். இலக்குகளை அடைவது துவங்கி உங்கள் நெகட்டிவ் விஷயங்களை பாசிட்டிவாக மாற்றுவது வரை கோலியின் அணுகுமுறை நிறைய மேலாண்மை தத்துவங்களோடு ஒத்து போகிறது.

 



தனி ஒருவனாக இந்தியாவை வெற்றிக்கு அழைத்து செல்லும் கோலி ரசிகர்கள் சொன்னதை போல ஒரு பாகுபலி தான்! இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. கோலியின் ருத்ர தாண்டவம் தொடர்ந்தாலும், அணியின் மற்ற வீரர்களும் கைகோர்த்தால் இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும். தோனியின் மாஸ்டர் க்ளாஸ் கேப்டன்ஸியில். கோலியின் க்ளாஸிக் இன்னிங்ஸை பார்க்க இந்த தலைமுறை அதிர்ஷ்ட‌ம் செய்திருக்க வேண்டும் என்பது கிரிக்கெட் வெறியர்களின் கூற்று. கமான் கோலி! கமான் இந்தியா! மேக் தி மிராக்கிள்!

ச.ஸ்ரீராம்

 

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ