Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.பி.எல் 2016: முதல் போட்டியில் மும்பை பேட்டிங்!

ஐ.பி.எல் தொடரின் 9வது சீஸன் நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை- புனே அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் நீக்கப்பட்ட பிறகு தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக ஒரே அணிக்காக கேப்டனாக இருந்த தோனி இன்றைய ஆட்டத்தில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இன்னோரு அணியை வழி நடத்தவுள்ளார்.



டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நடப்பு சாம்பியனை புதுமுக அணி இன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஆனாலும் இந்த போட்டி சென்னை ரசிகர்களுக்கு சற்று சோகமான போட்டி தான். சி.எஸ்.கே இல்லாத ஐபிஎல் தண்ணீர் இல்லாத கடலுக்கு சமம் என்று எல்லாம் வர்ணித்து மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ