Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நூறாவது போட்டியில் ஆட்டநாயகன்: அசத்தல் அமித் மிஷ்ரா!

50, 100 போன்றவை என்றுமே நமக்கு ஸ்பெஷல். ஒரு படம் நூறு நாள் ஒடுவது, 50வது பிறந்தநாள், கிரிக்கெட்டில் செஞ்சுரி என இந்த எண்கள் என்றுமே மறக்க முடியாதவை. அதுபோலத்தான் ஒரு விளையாட்டு வீரருக்கு நூறாவது போட்டி என்பது. அப்படிப்பட்ட மறக்க முடியாத போட்டியில் பறக்க முடியாத சம்பவங்கள் நடந்தால்? அப்படி டபுள் சந்தோஷத்தில் திளைக்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா. ஐ.பி.எல் தொடரில் தனது நூறாவது போட்டியில், 4 விக்கெட்டுகள் வீழ்த்தி பஞ்சாப் அணியை பந்தாடி ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.ஐ.பி.எல் வரலாற்றின் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் 33 வயதான லெக்-ஸ்பின்னர் மிஷ்ராவும் ஒருவர். ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முதலாக மூன்று ஹாட்-டிரிக் கைப்பற்றியவர் மிஷ்ரா தான். அதையும் மூன்று வேறு அணிகளுக்காக (டேர்டெவில்ஸ், டெக்கான், சன்ரைசர்ஸ்) வீழ்த்தியுள்ளது இன்னும் சிறப்பு. ஒட்டுமொத்த மந்துவீச்சாளர்களில் 112 விக்கெட்டுகளோடு, மலிங்காவிற்கு (98 போட்டிகள் – 143 விக்கெட்) அடுத்தபடியாக சாவ்லா, ஹர்பஜனோடு இணைந்து  இரண்டாம் இடத்தில் இருந்தார் மிஷ்ரா. சாவ்லா, ஹர்பஜன் ஆகியோர் தலா 113 போட்டிகள் எடுத்துக்கொண்டாலும், மிஷ்ரா அந்த இலக்கை அடைய வெறும் 99 போட்டிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார். தனது அபார சுழல் திறமையால், ஃப்லோட்டிங் பால், கூக்ளி என பல ஆயுதங்கள் பயன்படுத்தி விக்கெட்டுகள் வீழ்த்தும் இவர், தனது நூறாவது போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், அதிக விக்கெட் வீழ்த்திய ஸ்பின்னர் என்ற பெருமையைப் பெற்றதோடு தனது நூறாவது போட்டியில் ஆட்டநாயகன் விருதோடு திளைத்தார் மிஷ்ரா.   

ஒன்பதாவது ஐ.பி.எல் தொடரின் 7வது போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின. சுமாரான தொடங்கிய பஞ்சாபின் ஆட்டம், மிஷ்ரா பந்தை தொட்ட பிறகு பஞ்சரானது. நூறாவது போட்டியில் அவர் வீசிய முதல் பந்தே ஷான் மார்ஷ் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அதன்பின்னர் மேக்ஸ்வெல், மில்லர் என இரு அதிரடி வீரர்களையும் அசால்டாய் வெளியேற்றினார். சில நேரம் தண்ணி காட்டிய வோஹ்ராவையும்(32 ரன்) பெவிலியனுக்கு அனுப்பி மேலும் பஞ்சாபை போட்டுத் தள்ளினார். கடைசி கட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் கொடுப்பதிலேயே கேப்டன் ஜாகிர் ஆர்வம் காட்டியதால், மிஷ்ராவால் மூன்று ஓவர் மட்டுமே பந்து வீச முடிந்தது. வீசிய அந்த மூன்று ஓவர்களில் 13 பந்துகளில் எதிரணி வீரர்களால் ரன் எடுக்க முடியவில்லை. வெறும் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுக்க, டி காக்(59), சஞ்சு சாம்சன்(33) ஆகியோரின் நிதான ஆட்டத்தால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் சரண்டர் ஆன டேர்டெவில்ஸ் மீண்டு வந்திருப்பது அவர்களுக்குப் புத்துணர்ச்சியளிக்கும். பஞ்சாப் அணி தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோற்றுள்ளது.

33 வயதானாலும் இன்னும் இளம் சுழற்பந்து வீச்சாளர் போலத் திறம்படவே செயல்படுகிறார் மிஷ்ரா. இந்த சிறந்த செயல்பாட்டை ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமல்லாமல் இந்திய அணிக்காகவும் காட்டினால் சர்வதேச அரங்கிலும் சில சாதனைகள் படைக்கலாம்!

மு.பிரதீப் கிருஷ்ணா
மாணவர் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ