Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்பிய ஜடேஜா: அதிர்ச்சி தகவல்

 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்பிய அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரவீந்திர ஜடேஜாவிற்கும் அவரது தோழி ரிவா சோலங்கிக்கும் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், ஜடேஜா கடந்த 2005ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற நினைத்ததாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜடேஜாவின் தந்தை, பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார். 2005ம் ஆண்டு ஜடேஜா, தனது 17 வயதில் இருந்த போது, அவரது தாயார் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

தாயின் இழப்பை தாங்க முடியாத ஜடேஜா, கிரிக்கெட்டை தொடர முடியாமல் தவித்துள்ளார். எனவே அவர் கிரிக்கெட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அவரை கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதையடுத்து கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடிய ஜடேஜா, 2006 மற்றும் 2008ம் ஆண்டுகளில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியை விளையாடியுள்ளார். இதையடுத்து 2008ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல்-ல், ராஜஸ்தான் அணியில் களமிறங்கிய ஜடேஜா, 2009ம் ஆண்டு இந்திய ஒரு நாள் அணியிலும், டி20 அணியிலும் இடம்பிடித்தார்.

பின்னர் 2012ம் ஆண்டில்,  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் அவர் இடம் பிடித்தார். தற்போது இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டர்களில் ஒருவராக இருக்கும் ஜடேஜா,  2005-ல் இந்திய கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்பே, கிரிக்கெட்டை விட்டு வெளியேற நினைத்த தகவல் தற்போதுதான் வெளிவந்துள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ