Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சச்சின்ன்ன்.... சச்சின்ன்ன்ன்.... இனி ஒலிம்பிக்கிலும் இது கேட்கும்!

 

2016 - ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

31 - வது ஒலிம்பிக் போட்டிகள்,  பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர்,  சல்மான்கான் நியமிக்கப்பட்டிருந்தார்.

விளையாட்டுப் போட்டிகளின் நல்லெண்ணத் தூதுவராக,  நடிகர் ஒருவரை நியமித்ததற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு எழுந்தது. கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத், மில்கா சிங் ஆகியோர்,  சல்மான்கானை நல்லெண்ணத் தூதராக நியமித்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை,  2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ