Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக போலீஸ் பற்றி விசாரித்த தோனி!

நேற்று இரவு பெங்களூருவில் உள்ள ரிட்ஸ் கால்டன் ஒட்டலில்,  இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியை,  சென்னை போலீஸின் முன்னாள் கூடுதல் துணை கமிஷனர் முரளி மரியாதை நிமித்தமாக‌ சந்தித்தார்.

அப்போது ஐ.பி.எல் போட்டிகளின் லைவ் கவரேஜ்,  ரூமில் உள்ள டி.வியில் எந்த சேனலில் வருகிறது என்று தேடிக்கொண்டிருந்தாராம். எந்த சேனல் என்று அந்த ஸ்டார் ஒட்டல் நிர்வாகிகளுக்கும் தெரியவில்லையாம். பிறகு, தோனியே தேடிக் கண்டுபிடித்து, ஒட்டல் நிர்வாகிகளிடம் சொல்லியதோடு, 'இதே ஒட்டலில் விராட்கோலி டீம் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் கேட்டால், உடனே இந்த சேனல் எண்ணை சொல்லுங்கள்' என்றாராம்.

''பாசமும், அன்பும் கொண்டவர்கள் சென்னைவாசிகள். உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் இதுவரை கிரிக்கெட் பார்க்க டிக்கெட் கூட கேட்டதில்லை. நான் தந்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டீர்கள். கிரவுண்டுக்கு வந்து பார்க்கமாட்டீர்கள். டி.வியில்தான் பார்ப்பீர்கள். நான் கொச்சின் வந்தாலோ, பெங்களூரு வந்தாலோ... நட்புடன் என்னை வந்து பார்த்து செல்கிறீர்கள். உங்களைப்போலத்தான் சென்னைவாசிகள். எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். அனைவரும் இப்படித்தான் இருக்கிறார்கள்" என்றாராம் தோனி.

முரளி தொடர்ந்து கூறும்போது, " 2004-ம் வருடம் முதல் பழக்கம். கொழும்புவில் கிரிக்கெட் விளையாட வீரராக வந்தார். இந்திய டீமிற்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தேன். என்னிடம் இருந்த துப்பாக்கியை வாங்கி ஆச்சர்யத்தோடு பார்த்தார். நிச்சயமாக ஒருநாள் இந்திய கேப்டனாக வருவார் என்று நான் சொன்னேன். அது குறுகிய காலத்தில் நடந்தது. நுங்கம்பாக்கம் ஏ.சி-யாக 2011-ல் இருக்கும்போது என் வீட்டுக்கு வந்திருந்தார். உலக கோப்பை வென்றுவிட்டு வந்த சந்தோஷத்தில் இருந்தார். 'பருப்பு வடை கிடைக்குமா?' என்று கேட்டார். தேங்காய் பால், பாசிபருப்பு, வெல்லம் கலந்து குடிக்க கேட்டார். அது அவருக்கு விருப்பமான உணவு. அடுத்து, என் மகள் திருமண நிகழ்ச்சிக்காக இரண்டாவது முறையாக 2015-ம் வருடம் ஆகஸ்டில் வந்திருந்தார். தோனி, அவர் மனைவி சாக்ஷி, மகள் ஸிவா(3 மாத குழந்தை)..மூவரும் வந்திருந்தனர். இட்லி, தோசை, சிக்கன் கறி, மட்டன் பிரியாணி சாப்பிடக் கொடுத்தோம். ரசித்து சாப்பிட்டார்கள். இந்தமுறை பெங்களூருவில் என்னிடம் சென்னையைப் பற்றி பல தகவல்களை கேட்டார். தமிழக போலீஸுன் லேட்டஸ்ட் அப்டேட் பற்றியெல்லாம் ஆர்வத்தோடு கேட்டறிந்தார். எனக்கு சந்தோஷமாக இருந்தது'' என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ