Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சச்சினுக்கு கிடைத்தது, காம்ப்ளிக்கு கிடைக்கல..! மனம் திறக்கும் கபில்தேவ்

 

சச்சினைவிட காம்ப்ளி திறமையானவராக இருந்தாலும் பெற்றோர், நண்பர்கள் என அனைத்து ஆதரவும் சச்சினுக்கு கிடைத்ததால் சிகரத்தை தொட்டார். ஆனால், இதுபோன்ற ஆதரவு காம்ப்ளிக்கு கிடைக்காததால் காணாமல் போனார் என்று மனம் திறந்துள்ளார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்.

சச்சின், காம்ப்ளி குறித்து கபில் தேவ் கூறுகையில், " சச்சினைவிட காம்ப்ளியிடம் அதிக திறமை இருக்கலாம். இருவரும் ஒன்றாகத்தான் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தனர். வீட்டில் உள்ள பெற்றோர், சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் சச்சின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தனர். இதனாலேயே 24 ஆண்டுகள் விளையாடினார். இதுபோன்ற ஒரு சூழல் காம்ப்ளிக்கு அமையாததால் ஏமாற்றமே மிஞ்சியது.

விளையாட்டு வீரருக்கு திறமை மட்டும் போதாது. பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், பள்ளி, கல்லூரி என எல்லா தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைக்க வேண்டும். அப்போதுதான், சிறந்த நட்சத்திரமாக உருவெடுக்க முடியும். குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப பெற்றோர்கள் வளர்ப்பது அவசியம். இதற்கு மாறாக தங்களின் விருப்பத்தை குழந்தைகளிடம் திணிக்க கூடாது. அவர்களுக்கு பிடிக்காத ஒன்றை செய்ய வற்புறுத்துவது தவறானது.

கடந்த 1983 ம் ஆண்டு பிசிசிஐ-க்கு பெரிய அளவில் வருமானம் இல்லை. அதே ஆண்டு எனது தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. இதற்கு பின்னர்  பிசிசிஐ,  உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக உருவெடுத்தது. நாங்கள் வாங்கிய கோப்பையின் பலனை தற்போதைய வீரர்கள் அனுபவித்து வருகின்றனர்" என்று கூறினார்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ