Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாகச இளவரசி மில்லா!


‘முள்கம்பி பந்தலுக்கு அடியில் ஊர்ந்துசெல்வது, பெரிய சுவர்களில் ஏறுவது, உயரத்தில் இருந்து குதிப்பது, கயிற்றைப் பிடித்துக்கொண்டு வேகமாக மேலே ஏறுவது போன்ற ராணுவ வீரர்களின் சாகசங்களை நானும் அசால்ட்டா செய்வேன்’ என அசரவைக்கிறார் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஒன்பது வயது, மில்லா பிஸோட்டோ (Milla Bizzotto).

மில்லாவுக்கு ஏன் இந்த ஆர்வம் வந்தது? இந்த சாதனைக்கு என்ன காரணம்? நான்காம் வகுப்புக்கு வந்த மில்லா அமைதியானவள். யார் வம்புக்கும் போகமாட்டாள். இதைச் சாதகமாகப் பயண்படுத்திகொண்ட சக மாணவர்கள், மில்லாவை கேலி, கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். ‘நீ எந்த விளையாட்டுக்கும் லாயக்கில்லை’ என யாரும் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்.

வீட்டுக்கு வந்ததும் இவர்களுக்கு எப்படி தக்க பதிலடி கொடுப்பது என்று யோசித்தார் மில்லா. அப்போது, என்ன பிரச்னை என்று அப்பா கேட்டார். மில்லாவின் அப்பா கிறிஸ்டின் பிஸாட்டோ (Christian Bizzotto), உடற்பயிற்சி மையம் நடத்திவருகிறார். அவர், பேட்டில் ஃப்ராக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள பயிற்சி மேற்கொண்டிருந்த சமயம் அது. தானும் கலந்துகொள்ள ஆசையாக உள்ளது என்றார் மில்லா. அப்பாவும் சம்மதித்தார்.

வாரத்தில் 5 நாள், 3 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டார் மில்லா. தொடர்ந்து 6 மாதங்கள் பயிற்சிகள் மேற்கொண்டார். இந்த ஆண்டு மார்ச் 4, 5-ம் தேகளில் நடந்த ‘பேட்டில் ஃப்ராக்ஸ் ஃபர்ஸ்ட் எக்ஸ்ட்ரீம் 24-ஹவர்ஸ் ரேஸ் (BattleFrog’s first Xtreme 24-hours race)' என்று அழைக்கப்படும் போட்டியில் கலந்துகொண்டார். இந்தப் போட்டிகளில் இலக்கை அடைவது மிகவும் கடினம். ஆண்டுதோறும் நடக்கும் இந்த சாகசப் போட்டியில் கலந்து கொண்ட, மிகச் சிறிய வயது பெண் எனும் பெயருடன் போட்டியில் பங்கேற்றார் மில்லா.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள வர்ஜீனியா கடற்கரையில், சுமார் 58 கி.மீ தூரம் நடக்கும் இந்தத் த்ரில்லான அட்வெஞ்சர் போட்டியில், எட்டு கி.மீ தூரம் நீச்சல் அடிக்க வேண்டும். முள்கம்பி பந்தலுக்கு அடியில் ஊர்ந்து செல்லவேண்டும். 3.6 மீட்டர் உயரம் கொண்ட சுவரின் மீது ஏறி கடக்க வேண்டும். கயிற்றைப் பிடித்துக்கொண்டு, கால்கள் கீழே படாமல் தாவித் தாவி செல்ல வேண்டும். இப்படி 25 கடினமான இலக்குகளை ஆறு சுற்றுகளில், 24 மணி நேரத்தில் கடக்க வேண்டும். எல்லா தடைகளையும் கடந்து அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தார் மில்லா.

 

 இப்போது,  மில்லா தனது பள்ளி முழுக்க பிரபலம். முன்பு கேலி, கிண்டல் செய்தவர்கள் மில்லாவின் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். அடுத்து, மியாமியில் நடக்க இருக்கும் Athlete Race-ல் கலந்துகொள்ள உள்ளார். இதில், 6 கி.மீ தூரம் துடுப்புக்கொண்டு படகை செலுத்த வேண்டும். 5 கி.மீ தூரம் ஓடியபடி சில இலக்குகளை கடக்க வேண்டும். வரும் ஆகஸ்ட் மாதம் ஹவாய் தீவில் நடக்கும் ‘Spartan Trifecta எனும் சாகசப் போட்டியில் கலந்துகொள்கிறார்.

‘சாத்தியமற்றது எதுவும் எல்லை’ என்பதை நிரூபித்து காட்டி, மாணவர்களுக்கு ரோல்மாடலாக இருக்கிறார் மில்லா.

ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று, மாணவர்களிடம் புல்லிங் (Bullying) எனப்படும் கேலிக்கு எதிராக விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே மில்லாவின் கனவு.

- என்.மல்லிகார்ஜுனா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close