Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏலியன் ஏபி, மிஷின் கோலி சதம் - குஜராத்துக்கு ஷாக் தந்த பெங்களூரு

ரே டி20 போட்டியில் இரண்டு பேட்ஸ்மேன்கள் சதமடித்த அற்புதம் பெங்களூரில் நடந்தேறியது. இது ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தாலும், அதை அடித்த இருவர் விராத் கோலியும் டிவில்லியர்சும் என்று சொல்லும்போது, “இதிலென்னப்பா ஆச்சரியம்” என்று தான் தோன்றுகிறது. உச்சகட்ட பார்மில் இருக்கும் இந்த உலகின் தலைசிறந்த இரு பேட்ஸ்மேன்களும் இணைந்து 229 ரன்கள் குவித்து மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் என்ற மற்றொரு சாதனையையும் படைத்தனர்.

ரெய்னா இல்லாத முதல் ஐ.பி.எல் போட்டி

இன்றைய போட்டியில் டாசிலேயே பல ஆச்சரியங்கள் நிகழ்ந்தன. குஜராத் கேப்டன் ரெய்னா, தனக்குக் குழந்தை பிறக்கவிருப்பதால் நெதர்லாந்து சென்று விட்டார். அவருக்குப் பதிலாக மெக்குல்லம் கேப்டன் பதவியை ஏற்றார். ஐ.பி.எல் தொடரின் 9 ஆண்டு கால வரலாற்றில் ஒரு போட்டியைக் கூடத் தவறவிடாத ஒரே வீரர் ரெய்னா தான். ஐ.பி.எல் லில் அதிக ரன்கள் எடுத்த சாதனையைப் படைத்தவரான ரெய்னா தான் 143 போட்டிகளில் விளையாடி அதிக போட்டிகளில் விளையாடியுள்ளவர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். ஆறு ஐ.பி.எல் ஃபைனல்களில் விளையாடிய ஒரு வீரர் இல்லாதது குஜராத் அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

 

பச்சை நிறமே..பச்சை நிறமே..

வழக்கமாக சிவப்பு நிற உடையணிந்து விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இன்று பசுமையையும் மரம் வளர்த்தலையும் ஊக்குவிக்கும் வகையில் பச்சை நிற உடையணிந்து விளையாடியது. டாஸ் போடும் முன்பாக ஆர்.சி.பி கேப்டன் கோஹ்லி மெக்குல்லமிற்கு ஒரு மரக்கன்றை அளித்தார். குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. பெங்களூர் அணி இந்த ஐ.பி.எல் லில் முதல் முறையாக எந்த மாற்றமும் இல்லாமல் விளையாடியது.

தொடர்ந்து சொதப்பி வந்த கெயில் இப்போட்டியிலும் ஆறு ரன்னில் வெளியேற, கோஹ்லி பொறுமையாக விளையாடத் தொடங்கினார். அதேசமயம் மறுமுனையில் களம் புகுந்த ஏ.பி.டிவில்லியர்ஸ் வழக்கம்போல் 360 டிகிரியிலும் பந்தை விளாசத் தொடங்கிவிட்டார். அவர் 25 பந்துகளிலும் கோஹ்லி 39 பந்துகளிலும் அரை சதத்தைக் கடந்தனர். அதுவரை பந்துகளைத் தேர்ந்தெடுத்து ஆடிய இருவரும் அதன்பின்னர் ஒவ்வொரு பந்தையும் பெவிலியனுக்கு அனுப்பத் தொடங்கினர். குறிப்பாக டிவில்லியர்ஸ் சரவெடியாய் வெடித்தார். ஒவ்வொரு ரன்னாக எடுத்து அவருக்கு ஸ்டிரைக் கொடுத்து கோஹ்லியும் ஒத்துழைப்புக் கொடுத்தார். பிரவீன் குமார் வீசிய 16வது ஓவரில் 23 ரன்கள் குவித்த ஏ.பி. 43 பந்துகளில் சதமடித்தார். ஐ.பி.எல் தொடரில் அவரடிக்கும் மூன்றாவது சதமிது. 18வது ஓவர் வரை அடக்கி வாசித்த கோஹ்லி 19 வது ஓவரில் 30 ரன்கள் விளாசினார். 53 பந்துகளில் சதமடித்து இத்தொடரில் மூன்றாவது சதமடித்தார் கோஹ்லி. இறுதியில் பெங்களூர் அணி 248 ரன்கள் குவித்தது. கோஹ்லி (8) டிவில்லியர்ஸ் (12) இணைந்து 20 சிக்சர்கள் அடித்து அசத்தினர்.

 

249 என்ற இலக்கைத் துறத்திய குஜராத் அணி வெறும் 104 ரன்களிலேயே ஆல் அவுட் ஆனது. பின்ச் மட்டுமே போராடி 37 ரன்கள் எடுத்தார். முந்தைய போட்டிகளில் சொதப்பிய ஜோர்டான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் பெங்களூர் அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ரன் விகித அடிப்படையில் ஒரு அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவே. 128 ரன்கள் எடுத்து அசத்திய டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவ்வெற்றியில் மூலம் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் நீடிக்கிறது.

கடந்த போட்டியில் தோற்ற பிறகு கோஹ்லியிடம் “இனி அனைத்துப் போட்டிகளிலும் உங்கள் அணி வெல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளதே” என்று கேட்க “எனக்குக் கிரிக்கெட்டில் இதுபோன்ற சவால்கள் மிகவும் பிடிக்கும். அதை நான் சந்தோஷமாக எதிர்கொண்டு சமாளிப்பேன்” என்றார். சொன்னது போலவே செய்து காட்டியிருக்கிறார் இந்த சாம்பியன்.

- மு.பிரதீப் கிருஷ்ணா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close