Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிசிசிஐ புதிய தலைவராக அனுராக் தாகூர் தேர்வு!

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக அனுராக் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தனிப்பட்ட சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, திருத்தப்பட்ட விதியின்படி அவர் தனது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்தவற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று (22-ம் தேதி) நடந்தது. இதில், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூருக்கு பெங்கால், அசாம், ஜார்கண்ட், திரிபுரா மற்றும் தேசிய கிரிக்கெட் கிளப் ஆகிய உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு இருந்தது. இதன் மூலம் அனுராக் தாகூர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பா.ஜ.க.வின் எம்.பி.யான அனுராக் தாகூருக்கு 41 வயதாகிறது. இதன் மூலம் அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இளம் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close