Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிம்பாப்வேயில் களம் இறங்கும் தோனியின் புதிய அணி!


வரும் வாரத்துடன் ஐபிஎல் போட்டிகள் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 11-ம் தேதி முதல் ஜிம்பாப்வேக்கு எதிராக மூன்று ஒரு நாள், மூன்று டி 20 போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது இந்திய அணி. கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அஷ்வின் ஆகிய வீரர்களுக்கு இந்த தொடரில், ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற காரணமாக இருந்தவர்கள் பலர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அசத்திய கே.எல்.ராகுல், சாஹல், டெல்லி அணிக்காக விளையாடிய கருண் நாயர், கொல்கத்தா அணி சார்பாக ஆடிய மனீஷ் பாண்டே, ஜெய்தேவ் உனட்கட், ஹைதராபாத் அணியின் பரிந்தர் ஸ்ரன், குஜராத் அணியில் விளையாடிய தவால் குல்கர்னி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜிம்பாப்வே தொடர் (3 ஒரு நாள், 3 டி20)

தோனி (கேப்டன்), கே.எல்.ராகுல், ஃபைஸ் ஃபைசல், மனீஷ் பாண்டே, கருண் நாயர், அம்பத்தி ராயுடு, ரிஷி தவாண், அக் ஷர் பட்டேல், ஜயந்த் யாதவ், தவால் குல்கர்னி, ஜஸ்ப்ரீத் பும்ரா, பரிந்தர் ஸ்ரன், ஜெய்தேவ் உனட்கட், மந்தீப் சிங், கேதர் ஜாதவ், சாஹல்.

மேற்கு இந்தியத் தீவுகள் தொடர் (4 டெஸ்ட்)

விராட் கோலி (கேப்டன் ), முரளி விஜய், ஷிக்கர் தவான், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே (துணை கேப்டன் ), ரோஹித் ஷர்மா, சஹா, அமித் மிஸ்ரா, ரவிச்சந்தர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, மொஹம்மத் ஷமி, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், ஷர்துல் தகூர், ஸ்டுவார்ட் பின்னி
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close