Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரியோ ஒலிம்பிக்...ரிங்கில் களம் இறங்குவாரா மேரிகோம்?

2016 -உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி, ரியோடி ஜெனீரோவில் நடைபெற உள்ளது.  ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி முதல் 21ம் தேதி வரை இந்த கோலாகல விழா அரங்கேற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 50 வீரர்கள், 42 வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனால்  இந்தியாவுக்குப் பதக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படும் குத்துச்சண்டைப் போட்டியில், 'பாந்தர் வெயிட்' பிரிவில் ஷிவ்தாபா என்ற ஒரே ஒரு நபர் மட்டுமே தகுதிப் பெற்றுள்ளார்.


2012 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றவரும், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவருமான மேரிகோம், 2008 ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற விஜேந்திரர் ஆகியோர் தகுதிப் பெறவில்லை. பெரி்தும் எதிர்பார்க்கபட்ட  மேரிகோம், கஜகஸ்தானில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டதால் அவர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்துவி்ட்டார். அதேபோல் விஜேந்திரர் தொழில்முறை வீரராக மாறிவிட்டார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும், மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடக்கூடிய வாய்ப்பைப் பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய குத்துச் சண்டை சம்மேளனம், வைல்ட் கார்ட் என்ற முறையில் சிறப்பு அனுமதியை பெற்று மேரிகோமை குத்துச் சண்டை ரிங்கில் களம் இறக்கும் முயற்சியில்  சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் தொழில் முறை வீரர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், விஜேந்திரருக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூலை மாதம், தொழில் முறை குத்துச் சண்டை வீரர்களுக்கு தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது அதில் விஜேந்திரர் வெற்றி பெற்றால், அவரும் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறுவார். எனவே ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றிய இவர்கள் இருவருக்கும், மீண்டு்ம் அதிர்ஷ்டம் அடிக்கும் பட்சத்தில், இரண்டு பதக்கங்களை இந்தியா எதிர்பார்க்கலாம்.

-அ.சையது அபுதாஹிர்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ