Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரி ஏய்ப்பு: லயனல் மெஸ்சிக்கு 22 மாத சிறைத் தண்டனை!

லக புகழ் பெற்ற கால்பந்து அணியான, ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வரும் லயனல் மெஸ்சிதான் அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன். 

2007 முதல் 2009 ம் ஆண்டு வரை, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக லயனல் மெஸ்சி மீது குற்றம் சாட்டப்பட்டது.  தனக்கு வரக்கூடிய விளம்பர வருவாயை , உள்ளதை விட குறைவாகக் காட்டி, சுமார் 4.1 மில்லியன் யுரோ அதாவது, இந்திய மதிப்பின்படி 60 கோடி ரூபாயை வரி ஏய்ப்பு செய்ததாக லயனல் மீதும், அவரது தந்தை ஜார்ஜ் ஹார்ஷியோ மீதும் வழக்கு தொடரப்பட்டது. 

ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்சியின் படத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியதால் கிடைத்த வருமானத்தை சுவிட்சர்லாந்து, பிரிட்டன், உருகுவே உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து கிடைத்த வருவாயாக காட்டி, இந்த வரி ஏய்ப்பு  நடைபெற்றிருப்பதாக மெஸ்சி மீது குற்றம்சாட்டப்பட்டது.  இதனால் பார்சிலோனா நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு மெஸ்சியை நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டது. 

இதற்கு பதில் அளித்த மெஸ்சி, தனக்கு எங்கிருந்து எப்படி வருவாய் வருகிறது என்று தெரியாது என்றும், தனது பண பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தனது தந்தை ஜார்ஜ்தான் கவனித்து வருவதாகவும், எனவே தனக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "இதுபோன்ற நிலையில் சம்பந்தப்பட்ட வீரர் வரி ஏய்ப்பு குறித்து முழுமையாக அறிந்திருக்க தேவையில்லை. எனவே மெஸ்சி, வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும்" எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.  

மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மெஸ்சி மற்றும் அவரது தந்தைக்கு 22 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

- பி.கமலா.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ