Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட...டாக்டர் 'சீட்' பெற இப்படியும் ஒரு வழியா?

''ஸ்விம்மிங் கத்துக்கிறது இப்போ சிட்டியில் ஒரு டிரண்டாயிடுச்சு. உடம் நலம், ஃபிட்னஸ் என்பதையெல்லாம் தாண்டி இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு'' என பேச ஆரம்பிக்கிறார் சென்னை மாவட்ட நீச்சல் பயிற்சி ஆய்வாளர் பிரேம் குமார்.

"நீச்சல் பெரும்பாலும் கிராமத்தவர்களுக்கு இயல்பான ஒன்று. அவர்களைப் பொறுத்தவரையிலும் ரொம்ப ஈஸியா தூரத்தைக் கடந்துடுவாங்க. ஆனால் அதுவும் ஒரு ஸ்போர்ட்ஸ்தான், அதுக்குன்னு போட்டிகளெல்லாம் நடக்குதுன்னு கூட நிறைய பேருக்கு தெரிவது இல்லை. இன்னும் சொல்லணும்னா மற்ற விளையாட்டுக்களைப் போலவே நீச்சலும் எஜுகேஷன்  கோட்டாவுக்குத் தகுதியானது என்பது தெரிவது இல்லை.  மற்ற விளையாட்டுக்களைவிட நீச்சல் மிக எளிதானது. 3 நாட்களில் பழகி விடலாம்.

மற்ற விளையாட்டுக்களை விளையாடும்போது, அவர்கள்  உடல் சார்ந்த  எத்தனையோ பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அது எதுவும் நீச்சலில் கிடையாது. மருத்துவம் மற்றும்  பொறியியல் கலந்தாய்வுகளில் 500 ஸ்போர்ட்ஸ் இடங்களுக்கு, நீச்சலில் இருந்து 50க்கும் குறைவானபேர்தான் பங்கேற்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் நீச்சலுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா இருக்குன்னு நிறைய பேருக்குத் தெரிவதில்லை.

பல இடங்களில் நீச்சலுக்கு சரியான நீச்சல் குளங்கள் இல்லை. இதனால் நீச்சல் பழகினாலே, பெரிய அளவிலான போட்டியாளர்கள் இல்லாமலேயே தேசிய அளவிலான போட்டிகளுக்கு எளிதாக தகுதி பெறலாம். இப்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் பிள்ளைகளின் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளின் இடங்களை பெறுவதற்காவே பிள்ளைகளை நீச்சல் சேர்த்து விடுவது ஒரு டிரண்ட் ஆயிருச்சு.

நகரங்களை விட கிராமங்களில்  நிறைய பேருக்கு நீச்சல் தெரியும் என்பதால், சரியான முறையில் சில பயிற்சிகள் இருந்தால் சிறந்த கல்லூரிகளில் சேருவதற்கு உதவியாக இருக்கும் என்பதைத்தாண்டி, நீச்சல் உங்கள் பிள்ளைகளின் கவனத்தை நிலைப்படுத்தி சாதிக்க உதவும் என்பது மருத்துவ ரீதியிலான உண்மை." என்கிறார்.

சு.சூர்யா கோமதி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ