Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுறாவிற்கு கையை இரையாக கொடுத்த சுழல் அலை வீராங்கனை ஹாமில்டன்! (வீடியோ)

மெரிக்காவைச் சேர்ந்த கடல் சுழல் அலை வீராங்கனையின் வாழ்க்கை, சற்று வித்தியாசமானதுதான். கடலில் எழும் அலையில் சாகசம் செய்வது அத்தனை எளிதானது அல்ல என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

29 வயதாகும் பெதானி ஹாமில்டனுக்கு, சிறு வயது முதலே கடல் மீதும், ஆங்காரமாய் எழும்பும் அலை மீதும் அதீத காதல். பள்ளிக்கு செல்லாமல் கடலிலும் அலையிலும் நேரத்தை செலவழித்த ஹாமில்டனுக்கு, நாளைடைவில் அந்த விளையாட்டு பிடித்துப்போகவே, முற்றிலும் அலையின் சுழலை கட்டுக்குள் கொண்டு வரும் வித்தையை  கைவரப்பெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

14 வயது சிறுமிகளுக்குக்கான அலை சறுக்கு போட்டியில் முன்னிலையில் இருந்த ஹாமில்டன், ஒரு நாள் மாலை நேரத்தில் நண்பர்களுடன் கடலில் பயிற்சியில் இருந்தபொழுது, 14 அடி சுறா ஒன்று ஹாமில்டனை குறிவைத்துக் குதற ஆரம்பித்தது. நடுக்கடலில் எழும்பும் அலைகள், நீல நிறத்தில் இருந்து சிகப்பு நிறமாக மாறின. வலியோடு போராடி சுறாவிடமிருந்து தப்பிய ஹாமில்டனின் இடது கை முழுவதையும், சுறா துண்டாக்கி விழுங்கிக் கொண்டது. பதறிய ஹாமில்டனின் நண்பர்கள், சுறாவிடமிருந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அருகில் இருந்த மீனவர்கள், அந்த சுறாவை வேட்டையாடினார்கள். கடலின் கரைக்கு கொண்டு வந்து சுறாவின் வாயில் கை இருக்கிறதா என்று பார்த்த பொழுது, சர்ப் போர்டின் துண்டுகள் மட்டும் கிடைத்தது. அதன் அளவை அளந்து பார்த்தபோது, ஹாமில்டன் பயன்படுத்திய சர்ப் போர்டில் சுறாவால் கடிக்கப்பட்ட பகுதியின் அளவும் மிகச்சரியாக பொருந்தியது.   


கைகளை இழந்த ஹாமில்டன், ஆறு மாதங்களில் கையில் இருந்த காயங்களை ஆற்றி மீண்டும் கடலுக்குள் இறங்க ஆரம்பித்தார்.  நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் ஹாமில்டனை எச்சரித்தார்கள். 'மீண்டும் கடலுக்குள் இறங்காதே... உயிர் போய் உயிர் வந்திருக்கிறது. கைகளை இழந்தது போதும் உயிரை இழந்து விடாதே' என்றார்கள். ஆனால் ஹாமில்டன் யாரின் பேச்சையும் கேட்கவில்லை. தொடந்து 15 ஆண்டுகளாக கடலில் இறங்கி, ஒற்றைக் கையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார். உலகமே இவரின் திறமையை விட,  அவரின் போராட்டக் குணத்தை கண்டு பாராட்டியது. அந்த நாட்டின் வீரமங்கை என்கிற பட்டத்தையும் கொடுத்தார்கள்.

இறுதியில் அந்த நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சருடன் காதல் ஏற்பட்டு,  கல்யாணமும் ஆகி ஒரு ஆண் குழந்தையும் பெற்றெடுத்து பெண்மைக்கும் பெருமை சேர்த்தார். இப்பொழுதும் ஹாமில்டன்,  உலகத்தில் கடல் சுழல் அலைப் போட்டி எங்கு நடந்தாலும் அங்கு சர்ப்  போர்டுடன் கிளம்பி விடுவார். உலக தர வரிசையில் 13 வது இடத்தில் இருக்கிறார் ஹாமில்டன்.

சண்.சரவணக்குமார்    

எடிட்டர் சாய்ஸ்

MUST READ