Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக் கமிட்டியிலும் அம்பானி குடும்பம்?

லகின் மிகப்பெரிய விளையாட்டுக் கழகம் ஒலிம்பிக் கமிட்டி. இந்த கமிட்டியில் உறுப்பினராக இதுவரை இரண்டு இந்தியர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் கமிட்டியில் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, ஒலிம்பிக் கமிட்டி தயாராகி வருகிறது. உறுப்பினர் தேர்விற்கான விருப்ப மனுக்களை அந்தக் கழகம் பெற்றுள்ளது.

இந்த கமிட்டியில் உறுப்பினராக எட்டு பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் இந்தியாவின் தொழில்துறை ஜாம்பவானாக விளங்கும் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானியும் ஒருவர். இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினராக தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த எட்டு ஆண்டுகளாக விளையாட்டுத் துறையோடு நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறார். இந்திய கால்பந்து லீக் துவக்கியதில் முக்கிய பங்கு வகித்த இவர், ஐ.பி.எல்.கிரிக்கெட் அணியில் மும்பை அணியின் முதலாளியாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த தகுதிகளை முன் வைத்து சுயேச்சையாக ஒலிம்பிக் சங்க  உறுப்பினர் போட்டியில் இறங்கியுள்ளார். இவர் உறுப்பினராக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், ஒலிம்பிக் சங்கத்தில் முதல் பெண் உறுப்பினர் என்ற தகுதியையும் இவர் பெறும் நிலை உள்ளது. மேலும் இவருடைய எழுபதாவது வயது வரை இந்த உறுப்பினர் பதவியில் இவர் இருக்கலாம்.  வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக, இந்த உறுப்பினர் தேர்வு நடைபெற உள்ளதால், அதுகுறித்து மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- அ.சையது அபுதாஹிர்.

எடிட்டர் சாய்ஸ்