Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோடிகளில் கொழிக்கும் கிரிக்கெட் வீரர்கள்... கிறுகிறுத்துக்கிடக்கும் ஹாக்கி வீரர்கள்!

விளையாட்டு என்பது ஒன்றுதான். ஆனால் கிரிக்கெட்டுக்கு  ஒரு சம்பளம்,  ஹாக்கி, கால்பந்து விளையாட்டுக்கு ஒரு சம்பளம் என ஒரு கண்ணில் வெண்ணையும்  இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் கொந்தளிக்கிறார்கள் கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள்.  ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாக்கி விளையாட்டுக்கு எப்போதுதான் விமோசனம் கிடைக்கப்போகிறதோ என்ற குரல்  ஓங்கி ஒலிக்கிறது.

கிரிக்கெட் வீரர்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை. கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டு  வீரர்களுக்கு கொடுக்கப்படும்  சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

முதலில் கிரிக்கெட் விளையாட்டை பற்றி தெரிந்துகொள்வோம்...

கிரிக்கெட்

வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களுக்கு வீரர் சம்பளம் வேறுபடுத்தி வழங்கப்படுகிறது.

தோனி,கோலி இருவரும் சம்பளம் மற்றும் விளம்பரங்களில்  நடிப்பதன் மூலம்  இருவரும்  ஆண்டுக்கு சராசரியாக  50 கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிறார்கள். இந்திய அணியின் ஒருதின  மற்றும் டி20 கேப்டன் தோனி, டெஸ்ட் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களின் அடிப்படை ஊதியம் ஒரு கோடி ஆகும்.  இது தவிர ஐ.பி.எல் மூலமாகவும் எட்டிலக்க சம்பளம் பெறுகிறார்கள்.

A பிரிவு

டோனி, விராட் கோலி, புவனேஷ்வர் குமார், அஸ்வின், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 1 கோடி. இது தவிர அவர்கள் விளையாடும் ஒரு  டெஸ்ட் போட்டிக்கு ரூ. 5 லட்சமும்,  ஒருநாள் போட்டி ஒன்றுக்கு 3 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

B பிரிவு

முரளிவிஜய், ஜடேஜா, புஜாரா, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ரஹானே, உமேஷ் யாதவ், அம்பத்தி ராயுடு, இஷாந்த் சர்மா, முகமது சமி, ஓஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 50 லட்சமாக கிடைக்கும். ஒரு டெஸ்ட் போட்டிக்கு 3 லட்சம், ஒரு ஒருநாள் போட்டிக்கு 1.75 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

C பிரிவு

இதில் அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், சகா, ஸ்டூவர்ட் பின்னி, மோகித் சர்மா,அக்சர் படேல், திவாரி, உத்தப்பா, ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.25 லட்சம். ஒரு டெஸ்ட் போட்டிக்கு 1.5 லட்சமும், ஒரு ஒருநாள் போட்டிக்கு 1 லட்சமும் வழங்கப்படுகிறது.

இந்திய டென்னிஸ் வீரர்களின் 2015 -   2016 சம்பள விவரங்கள்

1.ரோகன் போப்பனா -  1.78 கோடி

2.லியண்டர் பையஸ் -  1.55 கோடி

3.சோம்தேவ் வர்மன் -  1.53 கோடி

4.சானியா மிர்சா -        3.35  கோடி

இது தவிர இவர்கள் விளம்பரம்  மூலமும் வருமானம் ஈட்டுகிறார்கள்.

 

ஹாக்கி விளையாட்டில் சம்பள விவரம்

ஹாக்கி விளையாட்டில், வீரர்களுக்கு என்ன சம்பளம் என்ன என்பது குறித்து  தெளிவான தகவலை ஹாக்கி ஆணையம்  வெளியிடுவது கிடையாது. அதே சமயம் கடந்த பத்து வருடங்களில், ஹாக்கி  வீரர்கள் பலர் சம்பளப் பிரச்னையால் அணியில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இந்தியாவில் பெண்கள் அணியில் இருக்கும் வீராங்கனைகளுக்கு, ஆண்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு கூட கிடைப்பது கிடையாது.

நட்சத்திர வீரர்களான  தோனி , ரெய்னா ஆகிய இரண்டு கிரிக்கெட் வீரர்களும் ஹாக்கி டீம்களை விலைக்கு வாங்கியுள்ளனர். தோனிக்கு ராஞ்சி ரைஸ்சஸ்,  ரெய்னாக்கு  உத்தரபிரதேஷ் விஷாஜ். ஆனால் இந்த டீம்களில் உள்ள வீரர்களுக்கு இன்னும்  சம்பளம் வழங்கப்படவில்லை என்கிற பிரச்னையும் எழுந்துள்ளது. இப்படிதான் உள்ளது விளையாட்டு துறையில் ஹாக்கியின் நிலைமை.

கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டு என கருதும் நிலை என்றுதான் மாறுமோ...?

எம்.திலீபன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close