Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரியோவை மிரட்டும் ஜிகா... அச்சத்தில் ஒலிம்பிக் சங்கம்!

லகை அச்சுறுத்தும் கொடிய நோய்களின் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருப்பது ஜிகா வைரஸ். வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் திருவிழாவில், ஜிகா வைரஸ் கொடூர தாக்கத்தை உண்டாக்கும் என்று அஞ்சி நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் உலகளாவிய விளையாட்டு வீரர்களும், உலக ஒலிம்பிக் சங்கத்தினரும். இதனால் ஜிகா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள, பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர்.

ஜிகா வைரஸின் பூர்வீகம்

ஜிகா என்ற உகாண்டா நாட்டுக் காடுகளில், 1947 ல் குரங்குகளிடம் இருந்து  இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது.அதன்பிறகு ஆப்பிரிக்க மனிதர்களிடம் 1952 ல் கண்டுபிடிக்கப்பட்டது இந்த ஜிகா வைரஸ். மெல்ல மெல்ல வளர்ந்து, உலகம் முழுவதும் பரவி, இரண்டு ஜிகா வைரஸாக உருவெடுத்துள்ளது.

ஆப்ரிக்க வெரைட்டி, ஆசிய வெரைட்டி என்று இரண்டு வகையான வைரஸ்கள், உலகை அச்சுறுத்தி வருகின்றன. இப்போது அமெரிக்காவை அச்சுறுத்துவது ஆசிய வெரைட்டி ஜிகா வைரஸாகும்.

உலகத்தை அச்சுறுத்தும் இந்த ஜிகா வைரஸ் குறித்து மதுரை மருத்துவர் சக்கரவர்த்தியிடம் பேசினோம்.

“ ஜிகா ( ZIKA) வைரஸ் என்பது, ஃப்ளேவி என்ற குடும்பத்தை சேர்ந்தது.டெங்கு, சிக்கன் குன்யாவின் ஒன்று விட்ட உறவினர். ஏன் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் இருகின்றன.

முதலில் இந்த நோய்  கர்ப்பிணிகளை முதல் மூன்று மாதத்தில் தாக்கினால் வயிற்றில் வளரும் குழந்தையின் மண்டையின் அளவு குறைந்து,  ‘மைக்ரோ கெபாஃலி’ ( Microcephaly) குழந்தைகள் என்னும் குழந்தைகள் பிறக்க காரணமாக அமையும். அப்படி பிறக்கும் குழந்தைகள், வளரும் பொழுதும் வளர்ந்த பிறகும் அவர்களின் தலை விகாரமாக இருக்கும். தவிர மூளையின் அளவும் வளர்ச்சியும்  குறைவாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.   

இரண்டாவது,  'குல்லியன் பாரி சிண்ட்ரோம்' (Gullian barry syndrome) என்ற நோயை பரப்பும்.இந்த நோய்  காலில் இருந்து கிளம்பி அப்படியே மத்திய நரம்பு மண்டலத்திற்கு சென்று, நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கும். நரம்பு மண்டலம் செயலிழந்தால் அடுத்தபடியாக எழுந்து நடக்க முடியாத நிலை வரும். இதனால்தான்  ஜிகா வைரஸ்க்கு உலகம் நடுங்குகிறது. மற்றபடி மரணம் எல்லாம் பெரும்பாலும் வராது.

எப்படி ஜிகா வைரஸ் நம்மை தாக்குகிறது என்றால்,  பெண் ஏடிஸ் கொசுக்கள் வகை மனிதர்களை கடிக்கும் பொழுது ஜிகா வைரஸ் வரும்.பெரும்பாலும் கர்ப்பிணி பெண்களை கடிக்கும்பொழுது அதன் தாக்கம், நச்சுக் கொடி மூலம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பரவும். அம்மாவின் ரத்தத்தில் இந்த வைரஸ் தாக்கினால் கண்டிப்பாக குழந்தையின் தலையில் இருக்கும் எலும்புகள் வளாராது. இதனால் மூளையின் வளர்ச்சி பாதிப்பதோடு, குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்கும்.  

ஏ.டி.எஸ் கொசுக் கடித்தால், வைரஸ் ஐந்து முதல் பத்து  நாட்களில் வளர்ச்சியடைந்து ஜிகா தாக்கும். மனிதனை கொசு கடித்ததும் ஜிகா உடலில் நுழைந்த இரண்டாவது நாளில் தோளில் லேசான தடிப்பு (rash) ஏற்படும். அடுத்தக்கட்டமாக காய்ச்சல், உடம்பு வலி பயங்கரமாக இருக்கும்.

ஒருவரின் உடலில்  ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட ரத்தம் இருந்தால், அவர்களிடம் இருந்து கொசுக்கள் அதிக வைரஸ்களை பரப்பும். ஏ.டி.எஸ் கொசுக்கள் கடித்ததும் முதல் நாளில் சாதாரண காய்ச்சல், உடல் சோர்வு, மூட்டுவலி உண்டாகும். அப்படியே மெல்ல மெல்ல நரம்பு மண்டலங்களை பாதிக்கும் மரணமில்லை என்றாலும் ஏன் ஜிகாவை கண்டு இந்த உலகம் ஏன் பயப்படுகிறது என்றால்,மேலே குறிப்பிட்ட கர்ப்பிணி வயிற்றில் வளரும் குழந்தைகளை தாக்கும் மைக்ரோ கெபாலி நோயினால்தான்.

சக்கரவர்த்தி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடந்த பொழுது பனிக் காலமாக நிலவி வந்தது. பனிக்காலத்தில் ஏ.டி.எஸ் கொசுக்கள் வளராது. அதனால் பெரும் பாதிப்புகள் இல்லை.

ஆனால் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள்,  ஆகஸ்ட் மாதத்தில் என்பதால் ஜூன் –ஜூலை மாதங்களில் பெய்யும் மழையில் தெருக்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால்,  அந்த சூழலில் ஏ.டி.எஸ் கொசுக்களும் நன்கு வளரும். எனவேதான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்கும் வீரர்கள் பெரும் பதட்டத்தில் இருக்கிறார்கள்.

என்ன செய்யப் போகிறார்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்துபவர்கள்?

பல்வேறு மருத்துவக் குழுவை தயாராக வைத்துள்ளதாகவும், உள்ளூர் தெருக்களில் மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் எங்கும் தங்காமல் வெளியேற்றும்படியாக வசதிகள் செய்துள்ளதாகவும் தெரிவித்தவர்கள், உலக சுகாதார நிறுவனம் அந்த அளவு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றே தெரிவித்திருப்பதாகவும், அதனால் யாரும் அஞ்சத் தேவை இல்லை என்றும்  கூறுகிறார்கள்.

சண்.சரவணக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ