Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூரோ 2016 : வேல்ஸிடம் இருந்து தப்பித்தது இங்கிலாந்து

ரோப்பிய கோப்பைத் தொடரில் வடக்கு அயர்லாந்து அணி, முதன் முறையாக வெற்றியை பதிவு செய்தது. டேனியல் ஸ்டர்ரிஜ்'லேட் கோல் ' இங்கிலாந்து அணி வேல்ஸ் அணியை வீழ்த்த உதவியது.

       

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்து அணி, வேல்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஐரோப்பிய கோப்பைத் தொடரில், வடக்கு அயர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து வடக்கு அயர்லாந்து  ரசிகர் ஒருவர் மாரடைப்பால் பலியானார்.

நேற்று லியோன் நகரில் நடந்த ஆட்டத்தில், வடக்கு அயர்லாந்து அணி, உக்ரேன் அணியுடன் மோதியது. இந்த போட்டியில், வடக்கு அயர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தங்கள் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் திளைத்த வடக்கு அயர்லாந்து ரசிகர் ஒருவர் பலியாகினார்.

ஜெர்மனி - போலந்து அணிகளுக்கிடையேயான ஆட்டம், கோல் எதுவும் விழாமல் சமனில் முடிந்தது. இங்கிலாந்து - வேல்ஸ் அணிகளுக்கிடையேயான மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, அபார வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தில், வேல்ஸ் அணியின் காரத் பேல் முதல் கோல் அடித்தார். இந்த கோலுக்கு ஜேமி வார்டி பதிலடி கொடுக்க, ஸ்டாப்பேஜ் நேரத்தில் டேனியல் ஸ்டர்ரிஜ் அடித்த கோல், இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவியது.

மற்றொரு ஆட்டத்தில், போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி அல்பேனியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.  கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அமெரிக்க அணி ஈகுவடார் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ