Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒருத்தருக்கு இவ்வளவு உணவா? நெட்டிசன்களின் கோபத்தில் சிக்கிய விராட் கோலி

முன்பெல்லாம் பேட்டிங் சொதப்பல், அனுஷ்கா ஷர்மா என சர்ச்சையில் சிக்கும் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி இந்த முறை புதுவிதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஐ.பி.எல் போட்டியில் தெறி ஃபார்மில் இருந்த விராட் கோலிக்கு ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த படம் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கோலி.

'தனது முன் உள்ள மேஜையில் முழுக்க உணவுகளுடன் டின்னர் இது தான்' என பதிவிட்டுள்ள கோலியின் புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பல குழந்தைகள் உணவில்லாமல் தவிக்கிறார்கள். ஒருநாள் உணவு என்பதே அவர்களுக்கு கனவாக இருக்கிறது. அவர்களை போன்றவர்களுக்கு உதவுங்கள் ப்ளீஸ் என்றும்,



உங்கள் நாட்டில் நான் இருந்திருந்தால் நான் நிறைய குழந்தைகளுக்கு உதவியிருப்பேன். நீங்கள் ஏன் இப்படி சுயநலவாதியாக இருக்கிறீர்கள் என்றும் கொதித்துள்ளனர். இன்னும் சிலர் விராட் கோலியை பற்றி உங்களுக்கு என்ன தெரியும், அவர் விராட் கோலி பவுண்டேஷன் மூலம் பலருக்கு உதவி வருகிறார். ஒருவரது பர்சனல் விஷயங்களை பொது விஷயங்களோடு ஒப்பிடுவது தவறு என்றும் கூறியுள்ளனர்.



சமீபத்தில் பிரபலங்களின் பர்சனல் பதிவுகள் சர்ச்சைக்குள்ளாவது அதிகரித்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் சிங்கத்தின் முன் எடுத்த செல்ஃபி நேற்று சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ