Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆடுகளத்தில் புகுந்து ரொனால்டோவுடன் செஃல்பி எடுத்த ரசிகரை இழுத்து சென்ற போலீஸ் (வீடியோ)

ரோப்பா கால்பந்து போட்டியின் போது, போர்ச்சுக்கல் ரசிகர் ஒருவர், அதிரடியாக மைதானத்திற்குள் நுழைந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் செஃல்பி எடுத்துக் கொண்டார். அவரை காவல்துறையினர் இழுத்து சென்றனர்.

பாரிஸில், போர்ச்சுகல்– ஆஸ்திரியா மோதிய லீக் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. போட்டியின் போது, போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் தவறவிட்டார். இதனால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானார் ரொனால்டோ.



இந்த நிலையில் திடீரென ஒரு போர்ச்சுக்கல் ரசிகர், மைதானத்திற்குள் நுழைந்து ரொனால்டோவுடன் செஃல்பி எடுக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார். அந்த ரசிகருடன் செஃல்பி எடுக்க முன்வந்த ரொனால்டோ, சிரித்தபடி அவருக்கு போஸும் கொடுத்தார். ரசிகரும் உற்சாகமாக செஃல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் அவரை காவல்துறையினர் இரண்டு பேர் சேர்ந்த இழுத்துச் சென்றனர். மைதானத்தை சுற்றி காவலர்கள் இருந்தபோதும், ரசிகர் ஒருவர் உள்ளே நுழைந்து செஃல்பி எடுத்துக் கொண்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close