Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூரோவில் ஸ்பெயின் தோல்வி ; கோபா இறுதியில் அர்ஜென்டினா

யூரோ கால்பந்து தொடரில் குரோஷிய அணி  ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. யூரோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயினை குரோஷியா வீழ்த்தியுள்ளது.

 டி பிரிவில் நடந்த இந்த ஆட்டத்தில், 7வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோல் அடித்தது. பெப்ரிகாஸ் கொடுத்த பாசை அல்வாரோ மாரட்டா எளிதாக கோலாக்கினார். இந்த கோலுக்கு 45வது நிமிடத்தில் குரோஷியாவின் கல்நிக் பதிலடி கொடுத்தார். ஸ்பெயினுக்கு 70வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. செர்ஜியோ ரமோஸ் அடித்த இந்த பெனால்டியை குரோஷியா கோல்கீப்பர் டன்ஜெல் அற்புதமாக டைவ் அடித்து தடுத்து விட்டார்.

ஆட்டம் முடியும் தருவாயில் 87வது நிமிடத்தில் குரோஷிய வீரர் பெர்சிக் நேர்த்தியாக ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த பிரிவில் குரோஷியா 7 புள்ளிகளுடன் முதலிடத்தையும் ஸ்பெயின் 6 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்தது. நேற்று நடந்த பிற ஆட்டத்தில் துருக்கி 2-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசையும் போலந்து 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரேனையும் தோற்கடித்தன.

அதே வேளையில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடருக்கான அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி அமெரிக்க அணியை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் இசக்கியேல் லாவெசி முதல் கோல் அடித்தார். 32வது நிமிடத்தில் மெஸ்சியும் 50 மற்றும் 86வது நிமிடத்தில் ஹீகுவானும் பிற கோல்களை அடித்தனர். கோபா அமெரிக்கா இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி சிலியை எதிர்கொள்கிறது. 23 ஆண்டு காலமாக அர்ஜென்டினா அணி எந்த முக்கிய கோப்பையையும் வென்றதில்லை. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக தனது  55 வது சர்வதேச கோலை மெஸ்சி அடித்தார். இதற்கு முன் கேப்ரியல் படிஸ்டுடா 54 கோல்களை அடித்ததே சாதனையாக இருந்தது.

557 ரசிகர்கள் கைது

இதற்கிடையே கடந்த 12ம் தேதி நடந்த இங்கிலாந்து- ரஷ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இவ்விரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் ஈடுபட்ட இரு  ரஷ்ய ரசிகர்களுக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  30 இங்கிலாந்து ரசிகர்களும், 7 வடக்கு அயர்லாந்து ரசிகர்களும், 5 வேல்ஸ் ரசிகர்களும் பிரான்சை விட்டு வெளியேற்றப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் இதுவரை 557 ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ