Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மெஸ்சி வித் ரசிகர்' நெகிழ வைக்கும் புகைப்படம்





கால்பந்து போட்டிகள் முடிந்தவுடன் ரசிகர்கள் பாதுகாவலர்களை மீறி மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களை கட்டிபிடித்து கொள்வது உண்டு. பொதுவாக கால்பந்து வீரர்களுக்கு ரசிகர்களை மதிக்கும் குணம் உண்டு.முடிந்தவரை ரசிகர்களை அவமதிக்கும்விதத்தில் நடந்து கொள்வதில்லை. ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஒலிவர் கானிடம்  ரசிகர் ஒருவர் நிர்வாணமாக ஓடி வந்து கை கொடுத்தார். பரபரப்புக்காக அந்த ரசிகர் இப்படி செய்தாலும் ஓலிவர் கான் கோபத்தை காட்டவில்லை. மரியாதைக்காக  அந்த ரசிகருக்கு கை கொடுத்து விட்டு சென்றார்.

அதே போல் யூரோ கால்பந்து தொடரில்,  ஆஸ்திரிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ரொனால்டோ பெனால்டியை மிஸ் செய்த நிலையிலும் ஒரு ரசிகரை மகிழ்விக்கும் விதத்தில் செல்ஃபி எடுத்து கொண்டார். ரொனால்டோ போலவே அர்ஜென்டினா கேப்டன் லயனல் மெஸ்சிக்கும் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நேற்று நடந்த அரையிறுதியில் அர்ஜென்டினா அணி அமெரிக்காவுடன் மோதியது.

இந்த போட்டியில் அர்ஜென்டினா 4- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மெஸ்சியும் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். சர்வதேச போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி அடிக்கும் 55வது கோல் இதுவாகும். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்திருந்த கேப்ரியல் படிஸ்டுடாவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார். அமெரிக்காவுக்கு எதிரான போட்டி முடிந்ததும், மெஸ்சியின் ரசிகர் ஒருவர், அவரது காலைத் தொட்டு வணங்க, பதிலுக்கு மெஸ்சி அந்த ரசிகரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை நெகிழ வைத்தது.


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close