Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலியல் புகாரில் இந்திய கிரிக்கெட் வீரர் கைதாகவில்லை... பின்னர் வேறு யார்?

ஜிம்பாப்வேயில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் குழுவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கடந்த இரு நாட்களாக வதந்தி நிலவி வந்தது.

இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வந்தது.  வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது உண்மை வெளி வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் இந்தியர்தான். ஆனால், இந்திய கிரிக்கெட் அணிக்கும் அவருக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.

கைது செய்யப்பட்ட,  கிருஷ்ணா சத்யநாராயாணா என்பவர் ஜிம்பாப்வேயில் கன்சல்ட்டன்ட்டாக பணிபுரிந்து வருகிறார். ஹராரேவில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச்சாக தேர்வு செய்யப்பட்ட ஜஸ்பிரீத் பும்ராவுக்கு செக்கை வழங்கியவர். இதனால்தான் இந்திய கிரிக்கெட் குழுவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விட்டதாக வெளியே செய்திகள் வரத் தொடங்கி விட்டது.

இவருடன் சேர்த்து ஜாம்பியாவை சேர்ந்த மற்றொரு இந்திய தொழிலதிபரான ரவி கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை ஜிம்பாப்வே போலீஸ் உயரதிகாரி சரம்பா உறுதிபடுத்தியுள்ளார். தற்போது இருவரும் ஜாமீன் கேட்டுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ