Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளரை கங்குலி, சச்சின் மற்றும் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழு முடிவு செய்யும் என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில்  அனில் கும்ப்ளே, புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையை ஏற்று பி.சி.சி.ஐ, அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளது. இதன்படி ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு இந்த பதவியில் அனில் கும்ப்ளே இருப்பார்.

இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ''இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அனில் கும்ப்ளே செய்வார் என்பதால் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close