Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பெயின் கேப்டன் ஐகெர் கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு

டந்த 2010ம் ஆண்டு யூரோ 2012ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் கேப்டன் ஐகெர் கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஒய்வு அறிவித்துள்ளார்.
 

நடப்பு யூரோ தொடரில் நாக்அவுட் சுற்றிலேயே ஸ்பெயின் அணி இத்தாலியிடம் 2 கோல்கள் வாங்கி தோல்வியடைந்தது. இந்த தொடரில் ஸ்பெயின் அணியில் கேசிலாஸ் இடம் பெற்றிருந்தாலும் கோல்கீப்பிங் பணியை  டிஜியா மேற்கொண்டார்.

தற்போது 35 வயதான  கேசிலாஸ் மாற்று ஆட்டக்காரராகவே இருந்தார். யூரோவில் இருந்து ஸ்பெயினும் வெளியேறியதை தொடர்ந்து கேசிலாஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு முதல் ஸ்பெயின் அணிக்காக கேசிலாஸ் விளையாடி வருகிறார். அந்த அணிக்காக 167 சர்வதேச போட்டிகளில் களமிறங்கியுள்ளார். புகழ்பெற்ற ரியல்மாட்ரிட் அணிக்காக பல வருங்கள் கோல்கீப்பராக பணியாற்றியவர். தற்போது போர்ச்சுலின் போர்ட்டோ அணியின் கோல்கீப்பராக இருக்கிறார்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ