Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நேற்று இன்று நாளை' ரவிசாஸ்திரிக்கு கும்ப்ளே சமாதானம்

ந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் ரவி சாஸ்திரியை தொடர்பு கொண்டு சமாதானம் செய்ததாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களுருவில் செய்தியாளர்களுக்கு கும்ப்ளே அளித்த பேட்டியில், ''இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் நானே ரவி சாஸ்திரியை தொடர்பு கொண்டேன். அவரும் இந்திய அணிக்கு பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். அணியின் பயிற்சியாளர்களை விட அணியும் வீரர்களும்தான் முக்கியம். இந்திய அணி நன்றாக செயல்பட வேண்டும். அனைத்து ஃபார்மட்டிலும் அசத்தும் அணி இது. நேற்று அவர் இருந்தார். இப்போது நான் இருக்கிறேன். நாளை இன்னொருவர் இந்த பொறுப்பை ஏற்கலாம். இந்த பொறுப்பு நிரந்தரமானது கிடையாது என்று சமாதானம் கூறினேன்.  

இந்திய அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. ஒரு ஆண்டுகாலம்தான் எனக்கு கொடுக்கப்பட்டது குறித்தெல்லாம் யோசித்து பார்த்தது கிடையாது. எவ்வளவு காலம் பயிற்சியாளராக இருக்கிறோம் என்றெல்லாம் நான் நினைத்து பார்க்கவில்லை. இது ஒரு பயணம் அவ்வளவுதான். இந்திய அணியின் ஓய்வு அறையில் மீண்டும்  வீரர்களுடன் சேர்ந்திருப்பது எனக்கு கிடைத்த கௌரவம்.

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, முதலில் பந்து வீச்சாளர்களை மிகவும் நெருக்கமாகக் கவனிக்க வேண்டியது இருக்கிறது.  எந்த இடத்தில் சோர்வடைகிறார்கள் தவறு செய்கிறார்கள் என்பதைக் கணிக்க வேண்டியது உள்ளது. வேகப்பந்து வீச்சுக்குப் பயிற்சியாளர் தேவை என்று கருதுகிறார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இப்போதே  பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்படுவது கடினம். தற்போதைக்கு என்னாலேயே இந்த துறையில் சிறப்பாகச் செயல்பட முடியும். இந்திய அணிக்காக ஆடும் போது  நமது பந்து வீச்சுக்கு நான்தான் கேப்டன் என்று நினைத்துக் கொள்வேன். எல்லா வீரர்களுக்கும் நாம் தலைவர் என்ற உணர்வு அவசியம் தேவை.

இந்திய அணியின் பயிற்சியாளர் என்றால் அதன் பொறுப்பு என்ன என்பது  எனக்குத் தெரியும். கடும் எதிர்பார்ப்பு இருக்கும்.  அணி மைதானத்திற்கு செல்வது, ஆடும் 11 வீரர்களை கேப்டன்தான் தேர்வு செய்வார். அணியில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டால், அத்துடன் கதை முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். எப்போதும் அணியில் ஒரு அங்கம்தான் என்ற எண்ணம் வேண்டும்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  தொடரை பொறுத்தவரை,  விராட்கோலி, முரளி விஜய், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் ஏற்கெனவே  வெஸ்ட் இண்டீசில் விளையாடி இருக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த வீரர்கள் நிறைந்த அணி இது. எனது அனுபவமும் கைகொடுக்கும். சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் நெருக்கடியை தரலாம். எனினும் சமாளிக்க முடியும்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close