Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யூரோவில் ரொனால்டோவுக்கு இன்று தேர்வு!

ரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் உலகின் முன்னணி கால்பந்து வீரர் ரொனால்டோ அடங்கிய போர்ச்சுகல் அணி காலிறுதி சுற்றில் போலந்து அணியை மார்செலி நகரில் சந்திக்கிறது.

முதல் சுற்றை பொறுத்த வரை போர்ச்சுகல் அணி தட்டுத் தடுமாறிதான் நாக்அவுட்டுக்கு முன்னேறியது. போர்ச்சுகல் அணி 3 ஆட்டங்களில் சமன் கண்டது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. முன்களத்தில் ரொனால்டோவும் நானியும் தான் முக்கிய வீரர்கள். தடுப்பாட்டத்தில் பெப்பெ அசத்துவார். அதுபோல் ரிச்சர்டோ கர்வாலாவும் பின்கள ஆட்டத்தில் போர்ச்சுகலுக்கு கைகொடுக்கக் கூடும்.

போலந்து அணியின் கேப்டன் ராபர்ட் லெவோண்டஸ்கி பார்ம் அவுட்டாகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவுதான். லெவோன்டஸ்கி தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக நடத்தினால் , போர்ச்சுகலின் பின்களம் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இந்த தொடரில் லெவோன்டஸ்கி இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

ஆனால் தடுப்பாட்டத்தில் போலந்து அணி வலிமையானதாக இருக்கிறது.  இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் ஒரு கோல் மட்டுமே அந்த அணி விட்டுக் கொடுத்துள்ளது. போலந்து அணியின் கோல்கீப்பர் செசாய்னி ஐரோப்பாவின் மிகச்சிறந்த கோல்கீப்பர்களுள் ஒருவர். அவரை மிஞ்சி கோல் அடிப்பது ரொனால்டோவுக்கே கடும் சவால்தன்.

ஐரோப்பிய தொடரில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறை. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டித் தொடங்குகிறது. சோனி ஈஎஸ்பின் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ