Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதுவும் ஓட்டம்தான், ஆனால் அர்த்தமுள்ள ஓட்டம்!

லகில் இன்னமும் போலியோ நோய் பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான், நைஜீரியா, பாகிஸ்தான் நாடுகள் இடம்பெற்று உள்ளன. தலிபான்களின் தீவிரவாதத்தால், அந்த நாட்டு குழந்தைகளுக்கு பல ஆண்டு காலமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவில்லை.

இதனால் போலியோ நோய் பெருகி வருகிறது. தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த வரை அதனை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது. தொண்டு நிறுவனங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினால், அவர்களை மிரட்டும் பணியில் ஈடுபடுவார்கள்.

பெரும்பாலான பெற்றோருக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டுமென்ற அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. அரசும் கண்டு கொள்வதில்லை. இதனால் ஏராளமான குழந்தைகள்  போலியோ நோயால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தற்போது தலிபான்கள் ஒடுக்கப்பட்ட நிலையில், அங்கு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டு பரவி வருவதால், கிரிக்கெட் வீரர்களை வைத்து, போலியோ சொட்டு மருந்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இதையடுத்து சொட்டு மருந்து எடுத்துக் கொள்ள வராத குழந்தைகளை பிடிக்கும் பணியில் ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஈடுட்டனர். அந்த புகைப்படம் ஒரு வார காலமாக  ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது.



 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close