Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரொனால்டோ பெனால்டியை பார்க்கவே மாட்டாராம்!

ண்மையில் டைபிரேக்கரில் பெனால்டியை வெளியே அடித்த அர்ஜென்டினா கேப்டன் லயனல் மெஸ்சி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார். மெஸ்சியை போலவே போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோவும் இதுவரைக்கும் அந்த அணிக்கு எந்த கோப்பையையும் வாங்கிக் கொடுத்ததில்லை.

இந்த யூரோவில் கூட தகுக்ச் சுற்று ஆட்டத்தில் பீல்டு கோல் அடிக்க போர்ச்சுக்கல் அணி தடுமாறியே வருகிறது. முன்களத்தில் தனியாக பந்தை கடத்திச் செல்லும் திறன் படைத்த  ரொனால்டோவே தடுமாறித்தான் வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நடந்த யூரோ தொடரின்  காலிறுதி ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணி, போலந்து அணியுடன் மோதியது. ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் கண்டதையடுத்து, டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் போர்ச்சுக்கல் அணியின் முதல் பெனால்டியை, ரொனால்டோ கோலாக்கி விட்டார். வழக்கமாக டைபிரேக்கரின்போது 11 வீரர்களும் தோள் சேர்த்து நிற்பது வழக்கம்.

ஆனால் நேற்று மிகவும் நெர்வசாக இருந்த  ரொனால்டோ, தனது அணி வீரர்கள் பெனால்டி அடிப்பதைக் கூட பார்க்கும் சக்தியில்லாமல் கண்களை மூடிக் கொண்டர். நல்ல வேளையாக போர்ச்சுக்கல் அணி 5/3 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று விட்டது.

மெஸ்சியின் பாதிப்பில் இருந்து ரொனால்டோ இன்னும் வெளியே வரவில்லை போலும்.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ