Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற வீரர் வீராங்கனைகளுடன் பிரதமர் சந்திப்பு

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீர ர் வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை  இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ரியோ ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்குகிறது. முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு 100க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகளை இந்தியா அனுப்புகிறது. இதுவரை  102 இந்தியர்கள் ஒலிம்பிக்கிற்கு முன்னேறியுள்ளனர். இன்னும் பல வீரர்- வீராங்கனைகள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒலிம்பிக் செல்லும் வீரர் வீராங்கனைகள் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிஜேதந்திரா சிங், அகில இந்திய விளையாட்டு ஆணையத் தலைவர் விஜய் மல்கோத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் என். ராமச்சந்திரன் ஆகியார் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் வீரர் வீராங்கனைகளிடையே உரையாற்றினார்.

அப்போது தங்கமோ, வெள்ளியோ உங்கள் இலக்கு வெற்றியை நோக்கி இருக்கட்டும். போராட்ட குணத்தை இழந்து விட வேண்டாம். எந்த தடை வந்தாலும்  வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி  அறிவுரை வழங்கினார். தொடர்ந்து வீரர் வீராங்கனைகளுக்கு ஆட்டோகிராப் வழங்கிய பிரதமர் அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டார்.

இதற்கு முன்னதாக லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு 83 வீரர் வீராங்கனைகளை இந்தியா அதிகபட்சமாக அனுப்பியிருந்தது. அப்போது இந்தியா 6 பதக்கங்களை வென்றிருந்தது. ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா அதனைவிட அதிக பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ