Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அது ஒரு மெலிசான கோடு' – கோலி குறித்து கோச் கும்ப்ளே

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கும்ப்ளே, லோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறையை தான் விரும்புவதாகவும், அதையே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிக்காட்டும் என்றும் கூறினார்.

கர்நாடகாவைச் சார்ந்த 45 வயதான அணில் கும்ப்ளே, இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 956 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்ட கும்ப்ளே, இந்திய அணியுடன் தனது முதற்கட்ட பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இம்மாதம் தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே, பயிற்சியாளராக  கும்ப்ளேவிற்கு முதல் டெஸ்ட்.


இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்த கும்ப்ளே, இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறையை தான் விரும்புவதாகக் கூறினார். டெஸ்ட் போட்டிகளை அணுக‌ அதுவே சரியான முறை என்றும், வரும் தொடரில் இந்தியா, அப்படியே அந்தத் தொடரை டீல் செய்யும் என்றும் கூறினார். தான் விளையாடிய காலகட்டங்களில் தானும் அப்படி ஆக்ரோஷமாக செயல்பட்டவர் தான் என்றும், அதை வெளிக்காட்டிய விதமே, தனக்கும் கோலிக்குமான வித்தியாசத்தை  காட்டுகின்றது என்றும் கூறினார். அதேசமயம் கோலியின் ஆக்ரோஷ குண‌த்தை தான் ஒருபோதும் த‌டுக்கப்போவது இல்லை என்றும் கும்ப்ளே கூறினார். “கோலியின் குண‌ம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவரது இயற்கையான குண‌த்தை நான் என்றுமே தீண்ட மாட்டேன். ஆனால் ஒவ்வொரு வீரரும் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டும். அதற்கென்று சில குண‌ங்கள் இருக்கிறது. அது ஒரு மெலிதான கோடு தான். வீரர்கள் அனைவரும் அதை புரிந்துகொண்டு நடக்க வேண்டும்” என்று கூறினார்.



மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதன்மூலம் அணியின் சிறந்த காம்பினேஷன் கண்டறியப்படும் என்றும் கும்ப்ளே கூறினார். “ஒரு பயிற்சியாளராக இந்திய வீரர்களை மனதளவிலும், உடலளவிலும் 100 சதவிகிதம் சிறப்பாக தயார் படுத்துவேன். நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளோம். எனவே விரைவில் முன்னேற்றம் காண்போம். இந்தத் தொடர் மீது ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்புகளை இந்திய அணி நிச்சயம் நிறைவேற்றும்” என்றும் அவர் கூறினார்.

அச்சந்திப்பின் போது உடனிருந்த டெஸ்ட் கேப்டன் கோலி, கும்ப்ளேவின் பயிற்சி முறையை மிகவும் விரும்புவதாகக் கூறினார். அணி வீரர்களுக்குப் பயிற்சியின் போது கும்ப்ளே அளித்த ‘1 மணி நேரம் விளையாடும்’ சவால் மிகவும் நன்றாக இருந்ததாக கோலி கூறினார். “ அவர் ஒவ்வொரு வீரரையும் நன்றாக புரிந்துகொள்ளக்கூடியவர். ஒரு வீரராக அணிக்கு எப்படிப் பங்காற்றினாரோ, அப்படியே பயிற்சியாளராகவும் நிச்சயம் பங்களிப்பார் என்று கோலி நம்பிக்கை தெரிவித்தார்.

ஆர்.சி.பி. அணிக்கு கும்பிளே கேப்டனாக இருந்த போதுதான் கோலி ஒரு சிறந்த வீரராக உருவாக துவங்கினார். இப்போது அவரே ஆர்.சி.பி அணியின் எல்லாமுமாக விளங்குகிறார் கோலி. ஆர்.சி.பி யைப் போல இந்திய அணிக்காகவும் இந்த ஜம்போ காம்போ வெற்றிகளைத் தேடித்தரும் என்று நம்புவோம்!

மு.பிரதீப் கிருஷ்ணா
மாணவர் பத்திரிகையாளர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ